Published:Updated:

முஸ்லிம் என்பதால் வீடு தர மறுப்பு?!... விவாதத்தைக் கிளப்பிய இளம்பெண்ணின் ட்வீட்!

முஸ்லிம் என்பதால் வீடு தர மறுப்பு

முஸ்லிம் என்பதால் தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டது குறித்து இளம்பெண் ஹைஃபா ட்விட்டரில் பதிவிட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் கமெண்ட்டில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்துவரும் ஹைஃபா என்ற பெண், அனைவரும் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் மகிழ்ச்சியாக கொண்டாடி முடித்துவிட்ட நிலையில், தன்னுடைய வாழ்க்கையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி எப்படி இருந்தது என்பது குறித்து ஆதங்கத்துடன் ட்வீட் செய்திருக்கிறார். அவரின் பதிவு ட்விட்டரில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

ஹைஃபா என்ற முஸ்லிம் பெண், வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார். இதற்காக பல தரகர்களை தொடர்பு கொண்டு வீடு கேட்டு விசாரித்திருக்கிறார் அவர். அந்த வகையில் ஹைஃபா தரகர் ஒருவரிடம் வாட்ஸ்அப்பில் வீடு தொடர்பாக விசாரித்திருக்கிறார். அப்போது அந்த தரகர், ``உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு இளம்பெண், ``என் பெயர் ஹைஃபா" என்றிருக்கிறார். உடனே அந்த நபர், ``நீங்கள் இந்துவா?" என விசாரித்திருக்கிறார்... உடனே ஹைஃபா, ``இல்லை... அதில் ஏதேனும் பிரச்னையா?" எனக் கேட்டிருக்கிறார்.

முஸ்லிம்
முஸ்லிம்

அதற்கு அந்த நபர், ``வீடு காலியாக இருக்கிறது. ஆனால் அதன் உரிமையாளர் இந்துக் குடும்பத்தை எதிர்பார்க்கிறார்!" எனத் தெரிவித்திருக்கிறார். இதே போல, மற்றொரு சம்பவத்தின் ஸ்கிரீன்ஷாட்டையும் இளம்பெண் ட்விட்டரில் ஷேர் செய்திருக்கிறார்.

முஸ்லிம் என்பதால் தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டது குறித்து இளம்பெண் ஹைஃபா ட்விட்டரில் பதிவிட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் கமெண்ட்டில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.