Published:Updated:

மதம் தாண்டிய காதல்: கர்நாடக இளைஞரை கொடூரமாக கொலை செய்த ஸ்ரீராம் சேனா; என்ன நடந்தது?

செப்டம்பர் 28-ம் தேதி பெலகாவிலிருந்து 30 கி.மீ தொலைவில், தேசூர் மற்றும் கானாபூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் அர்பாஸின் உடல் கிடந்தது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், இந்து பெண்ணைக் காதலித்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் அர்பாஸ் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கர்நாடகா ஸ்ரீ ராம் சேனாவைச் சேர்ந்தவர்களும், பெண்ணின் குடும்பத்தினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளனர். செப்டம்பர் 28-ம் தேதி பெலகாவிலிருந்து 30 கி.மீ தொலைவில், தேசூர் மற்றும் கானாபூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் அர்பாஸின் உடல் கிடந்தது. குற்றவாளிகள் உடலைத் தண்டவாளத்தில் எறிந்து தற்கொலையாகச் சித்திரிக்க முயன்றுள்ளனர். ஆனால் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், அது கொலைதான் என உறுதி செய்துள்ளன.

Representational Image
Representational Image
புதுக்கோட்டை: காதல் திருமணம்; வரதட்சணைக் கொடுமை! - திருமணமான 6 மாதத்தில் விபரீத முடிவெடுத்த இளம்பெண்

அர்பாஸின் அம்மா நஜிமா அளித்துள்ள புகாரில், பெண்ணின் தந்தை கும்பர், ஸ்ரீ ராம் சேனாவைச் சேர்ந்த புண்டலிக் மகாராஜா மற்றும் பிர்ஜே ஆகியோர் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டும், இதுவரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை. மொத்தம் 33 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன் அர்பாஸின் காதல் விவகாரம் தெரியவந்தது முதலே அர்பாஸை கொலை செய்யக்கூட எதிர்தரப்பு துணியலாம் எனக் கணித்திருந்த அவரின் அம்மா நஜிமா, தன் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காகப் பல வீடுகளை மாற்றியும், அவரது முயற்சிகள் பலனளிக்காமல் போயுள்ளன.

அர்பாஸ் கொல்லப்படுவதற்கு இரண்டு நாள்கள் முன் இருந்து, அவரின் அம்மா மற்றும் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், `பெல்காவி மாவட்டத்தில் 11.03% இஸ்லாமியர்கள் வசிப்பதனால், தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஸ்ரீ ராம் சேனா போன்ற தீவிரவாத குழுக்கள் இங்கு ரவுடியிஸத்தில் இறங்குவது வழக்கம். இஸ்லாமிய மக்களின் தைரியத்தை ஒடுக்கி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவே அர்பாஸின் கொலை நடந்துள்ளது' என்கிறார்கள்.

Crime (Representational Image)
Crime (Representational Image)
`காதல் திருமணம்; ஆணவக்கொலை?!' - கணவர் குடும்பத்தினர்மீது இளம்பெண் பரபரப்பு புகார்

பெற்ற மகனின் கொடூர மரணத்தை கண்முன்னே கண்டுவிட்ட தாய் நஜிமா தற்போது ஆதரவின்றி தவித்து வருகிறார். கர்ப்பிணியாக இருக்கும் அவரின் மகள் தற்போது லண்டனில் கணவருடன் வசித்து வருகிறார். ``அவர்கள் என் ஒரே ஆதரவைப் பிடுங்கி அவர்களின் ரத்த வெறியைத் தீர்த்திருக்கலாம். ஆனால் என் மகனுக்கு நீதி கிடைக்கும் வரை நான் அமைதியாக மாட்டேன். அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவதை நான் பார்க்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார் நஜிமா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு