Published:Updated:

அனுமன் ஜெயந்தி ஊர்வலம்; மலர் தூவி, தண்ணீர் பந்தல் அமைத்து வரவேற்ற இஸ்லாமிய மக்கள்! | Video

அனுமன் ஜெயந்தி ஊர்வலம்

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தையொட்டி இஸ்லாமிய மக்கள் இந்துக்களின் 'ஷோபா யாத்ரா' ஊர்வலத்தை வரவேற்று உபசரிக்கும் வகையில் நடந்து கொண்டது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாடுமுழுவதும் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கங்கே சில பிரச்னைகளும் இதையொட்டி நடந்து வந்தது. அந்தவகையில் டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லிம்கள் மற்றும் அனுமன் ஊர்வலம் நடத்திய இரு தரப்பினரிடையே மோதல்கள் ஏற்பட்டன. இதில் காவல் துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதற்கு அடுத்த நாள் 'ஷோபா யாத்ரா (Shobha Yatra)' மத்திய பிரதேசத்தில் போபால் பகுதியில் நடைபெற்றது. பல கட்டமாக நடக்கும் இந்த ஊர்வலம் அந்தப் பகுதியில் இருந்த மசூதி வழியாகச் சென்றபோது அங்கிருந்த இஸ்லாமிய மக்கள் அதை வரவேற்கும் விதத்தில் மலர் தூவி, தண்ணீர் பந்தல் அமைத்து உபசரித்தனர்.

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தையொட்டி இஸ்லாமிய மக்கள் இந்துக்களின் 'ஷோபா யாத்ரா' ஊர்வலத்தை வரவேற்று உபசரிக்கும் வகையில் நடந்து கொண்டது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது. இது தொடர்பான காணொளி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism