Published:Updated:

`தினமும் 30 நிமிடம் தேசிய நலன் சார்ந்த தகவல்களை ஒளிபரப்ப வேண்டும்!' சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Television

தேசிய நலன் மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்களை தினமும் 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

`தினமும் 30 நிமிடம் தேசிய நலன் சார்ந்த தகவல்களை ஒளிபரப்ப வேண்டும்!' சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தேசிய நலன் மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்களை தினமும் 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Published:Updated:
Television

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   இந்தியாவில் டி.வி சேனல்களை `அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்- 2022’ க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் கீழ் டி.வி சேனல்கள் தேசிய மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்கள் ஒளிபரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் நவம்பர் 9 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்ற சேனல்களுக்கு அவகாசம் வழங்கப்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

 இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது நலன் மற்றும் தேசிய நலன் தொடர்பான தகவல்கள் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும். கல்வி மற்றும் எழுத்தறிவு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு , உடல்நலம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ,

Television
Television

பெண்கள் நலன்,  சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு ,தேசிய ஒருங்கிணைப்பு போன்ற  8 கருப்பொருள்கள் கொண்ட  தலைப்புகளின் கீழ் தினமும் தகவல்கள் ஒளிபரப்ப வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா பேசுகையில்,  “ஒளிபரப்பாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அத்தகைய உள்ளடக்கத்தை ஒளிபரப்புவதற்கான நேரம் மற்றும் செயல்படுத்தப்படும் தேதி தொடர்பான ஒரு குறிப்பிட்ட ஆலோசனையை விரைவில் வெளியிடுவோம். விளையாட்டுச் சேனல்கள் மற்றும் வெளிநாட்டு சேனல்களுக்கு உள்ளிட்ட சில சேனல்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.