Published:Updated:

`மனரீதியான சித்ரவதை; சிறையிலே கொல்லப்படலாம்!’ - பகீர் கிளப்பும் மருத்துவர் கஃபில் கான் மனைவி

கஃபில் கான்
கஃபில் கான்

இருபிரிவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் வகையில் பேசியதாக கஃபில் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

`என் கணவர் சிறையிலே கொல்லப்படலாம்’ என பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார் கோரக்பூர் மருத்துவர் கஃபில்கானின் மனைவி ஷமிஸ்தான் கான்.

யார் இந்த கஃபில் கான்!

கோராக்பூர் சம்பவத்தின்போது பரவலாகப் பேசப்பட்ட பெயர் கஃபில் கான். 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் கஃபில் கான் உட்பட 7பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கஃபில் கான்
கஃபில் கான்

குழந்தைகளின் உயிரைக்காப்பாற்ற போராடிய மருத்துவருக்குத் தண்டனை வழங்குவதா அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது எனக் கொந்தளித்தனர் அப்பகுதி மக்கள். விசாரணைக் குழுவின் அறிக்கையில் இந்தச் சம்பவத்துக்கு மருத்துவர் கபீல் கான் காரணமல்ல ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து ஏற்கெனவே எச்சரித்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் தனது சொந்தச் செலவில் உபகரணங்களை வாங்கி குழந்தைகளைக் காக்கப் போராடியதும் தெரியவந்தது.

`ஷிவ் விஹாருக்குத் திரும்ப எங்களுக்குத் தைரியமில்லை!’  -டெல்லி கலவரத்தால் கலங்கும் தம்பதி

கஃபில்கான் சிறையில் இருக்க என்ன காரணம்?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேசியதன் காரணமாக கஃபில்கான் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் 29-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மும்பையில் நடந்த கூட்டத்தில் கஃபில் கான் கலந்துகொண்டு உரையாற்றினார். இருபிரிவினர்களுக்கு இடையே மோதல் உருவாகும் வகையில் கஃபில் கான் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக கஃபீல் கான் கைது செய்யப்பட்டார்.

கஃபில் கான்
கஃபில் கான்

கஃபில் கானை மும்பையில் கைது செய்த போலீஸார் அவரை அங்கிருந்து அலிகாருக்குக் கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரா சிறையில் அடைத்தனர்.

``ஸ்டேஷன்ல என் பையன் பாதி உசுரோடுதான் இருந்தான்!'' - டெல்லி வன்முறையில் மகனை பறிகொடுத்த தாய் கதறல்

அதிர்ச்சி கொடுத்த போலீஸார்!

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் கஃபில் கானை விடுவிக்க மதுரா காவலர்கள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து கேட்டதற்கு அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மும்பைக் கூட்டத்தில் பேசியதற்காக இந்த நடவடிக்கை இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகார் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் இருபிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் வண்ணம் பேசியதால் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். மாநில அரசால் கஃபில் கான் குறிவைக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Representation image
Representation image

இந்நிலையில் சிறையில் இருக்கும் தனது கணவரின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என அவரது மனைவி அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கஃபில் கானின் மனைவி, ``மதுரா சிறையில் இருக்கும் எனது கணவரை சந்தித்துப் பேசினேன். சிறையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரியவந்தது. சிறையில் அவர் மனரீதியாகக் கடுமையான சித்ரவதையை அனுபவித்து வருகிறார். சிறைக்கு அழைத்து வந்த முதல் 5 நாள்கள் அவருக்கு உணவு வழங்காமல் இருந்துள்ளனர். சிறையில் வைத்தே அவரை கொலை செய்துவிடுவார்களோ என பயமாக இருக்கிறது. என் கணவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்குக் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு