Published:Updated:

`என் மகனோடு ஐ.ஐ.டி-யில் சேரப்போகும் தையல் தொழிலாளி மகன்!' - ஆனந்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

Arvind Kejriwal

டெல்லி அரசின் இலவச பயிற்சித் திட்டம் மூலம் தேர்ச்சி பெற்ற பட்டியலின மாணவர் ஒருவர் ஐ.ஐ.டி-யில் சேர உள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

`என் மகனோடு ஐ.ஐ.டி-யில் சேரப்போகும் தையல் தொழிலாளி மகன்!' - ஆனந்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி அரசின் இலவச பயிற்சித் திட்டம் மூலம் தேர்ச்சி பெற்ற பட்டியலின மாணவர் ஒருவர் ஐ.ஐ.டி-யில் சேர உள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Published:Updated:
Arvind Kejriwal

ஐ.ஐ.டி-யில் சேர விருப்பமுள்ள பட்டியலின மாணவர்களுக்கு `ஜெய் பீம் முதலமைச்சர் பிரதிபா விகாஸ்' ( Jai Bhim Mukhyamantri Pratibha Vikas Yojana) என்ற திட்டத்தின்கீழ் இலவச JEE பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது டெல்லி அரசு. கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் விஜய்குமார் என்ற மாணவர் முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு ஐ.ஐ.டி-யில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Vijay Kumar
Vijay Kumar

இந்தச் செய்தியை மிகவும் மகிழ்ச்சியாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். `` விஜயகுமாரின் தந்தை ஒரு தையல் தொழிலாளி. அவரின் தாய் இல்லத்தரசி. டெல்லி அரசு வழங்கிய இலவச பயிற்சியால் விஜய்குமார் ஐ.ஐ.டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுதான் அம்பேத்கரின் கனவாக இருந்தது. அதை டெல்லி அரசு நிறைவேற்றிவிட்டது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ``இந்த வருடம் என் மகனும் தையல் தொழிலாளரின் மகனும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போகிறார்கள் என்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது. பல ஆண்டுகளாக நல்ல கல்வி இல்லாததால் ஏழை ஒருவரின் மகன் ஏழையாகவே இருக்கும் சூழல் நிலவிவருகிறது. தற்போது அனைவருக்கும் இலவச மற்றும் தரமான கல்வி, பயிற்சி வழங்கியதன் மூலம் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி குறைந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

Arvind Kejriwal tweet
Arvind Kejriwal tweet

`ஜெய் பீம் முதலமைச்சர் பிரதிபா விகாஸ் திட்டம்' கடந்த வருடம் டெல்லி அரசால் கொண்டு வரப்பட்டது. பட்டியலினத்தைச் சேர்ந்த 4,953 மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் குழுவுக்கு நடந்த முதல் தேர்விலேயே ஒரு மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளதால் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் முதல்வர் கெஜ்ரிவால்' என்கின்றனர் ஆம் ஆத்மி நிர்வாகிகள்.