Published:Updated:

குஜராத்: பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி?! - சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம டிரோன்; 3 பேர் கைது

சுட்டுவீழ்த்தப்பட்ட டிரோன் ( ANI2 )

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்த இடத்துக்கு அருகில், மர்மமான முறையில் டிரோன் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது.

குஜராத்: பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி?! - சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம டிரோன்; 3 பேர் கைது

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்த இடத்துக்கு அருகில், மர்மமான முறையில் டிரோன் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது.

Published:Updated:
சுட்டுவீழ்த்தப்பட்ட டிரோன் ( ANI2 )

குஜராத் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம் செய்துவருகின்றனர். பாஜக தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். நேற்று ஒரே நாளில் நான்கு இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். நேற்று மாலை அகமதாபாத்தின் பாவ்லா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அந்த நேரத்தில் மர்ம டிரோன் ஒன்று அந்தப் பகுதியில் பறந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினர் அந்த டிரோனைச் சுட்டு வீழ்த்தினர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் டிரோன்களைப் பறக்கவிட்டது தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் பிரதமரின் தேர்தல் பிரசாரத்தை டிரோனில் வீடியோ எடுக்க முடிவுசெய்து அதை அனுப்பியிருந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரதமர் இருக்கும் இடத்தில் வானில் எந்த வாகனமும் பறக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், எப்படி டிரோன் பறந்தது என்றும், பிரதமரின் பாதுகாப்பில் எப்படிக் குளறுபடி ஏற்பட்டது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.