Published:Updated:

`வாருங்கள், சிங்கிளாக இருப்போம்!’ - மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ நாகலாந்து அமைச்சர் அழைப்பு

Temjen Imna Along ( Twitter )

`என்னைப்போல் சிங்கள் ஆக இருங்கள். அனைவரும் ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க இன்றே ’சிங்கிள்ஸ்’ இயக்கத்தில் சேருங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார் 42 வயதாகும் பேச்சிலர் அமைச்சரான டெம்ஜென் இம்னா அலோங்.

`வாருங்கள், சிங்கிளாக இருப்போம்!’ - மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ நாகலாந்து அமைச்சர் அழைப்பு

`என்னைப்போல் சிங்கள் ஆக இருங்கள். அனைவரும் ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க இன்றே ’சிங்கிள்ஸ்’ இயக்கத்தில் சேருங்கள்’ என்று ட்வீட் செய்துள்ளார் 42 வயதாகும் பேச்சிலர் அமைச்சரான டெம்ஜென் இம்னா அலோங்.

Published:Updated:
Temjen Imna Along ( Twitter )

உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நாகலாந்து அமைச்சர், மக்கள் தொகை கட்டுப்பாட்டை கொண்டுவர ’சிங்கிள்’ ஆக இருங்கள் என்றும், ’இப்போதே என்னுடன் ’சிங்கிள்ஸ்’ இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்’ என்றும் கூறியுள்ளது அனைவரையும் கவனிக்கவைத்துள்ளது.

Being Single (Representational Image)
Being Single (Representational Image)

நாகாலாந்து மாநிலத்தின் அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், நாகலாந்து மக்களின் சிறிய கண்கள் குறித்து, இனவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் பேசி சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆனவர். இப்போது, நாட்டில் மக்கள்தொகை பெருக்கத்தை பற்றி, நகைச்சுவையாக அவர் கூறியுள்ள கருத்து மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாகாலாந்தில், உலக மக்கள்தொகை தினத்தையொட்டி அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு, குடும்பக் கட்டுப்பாடு குறித்து தகவல்களைக் கேட்டறிந்த அமைச்சர் அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தீர்வையும் பரிந்துரைத்தார்.

Temjen Imna Along
Temjen Imna Along
Twitter

“உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பான பிரச்னைகளில் விழிப்புணர்வோடு இருப்போம். மற்றும் குழந்தைப் பேறு குறித்த தகவலறிந்து தீர்வுகளை புகுத்துவோம். அல்லது என்னைப் போல் தனிமையில்(சிங்கள்) இருங்கள். அனைவரும் ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க இன்றே ’சிங்கிள்ஸ்’ இயக்கத்தில் சேருங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார் 42 வயதாகும் இந்த பேச்சிலர் அமைச்சர். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட இந்த நகைச்சுவையான கருத்துக்கு மக்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

மேலும், ’உங்களுக்கு ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. தீவிரமான தலைப்புகளுடன் நகைச்சுவையின் கூறுகளை நீங்கள் கூறுவது அற்புதமாக இருக்கிறது’ என்று சமூகவலைதளவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மக்கள் தொகை பெருக்கம்
மக்கள் தொகை பெருக்கம்

முன்னதாக, சிறிய கண்களைக் கொண்டிருப்பதன் நன்மைகள் பற்றிய அமைச்சர் இன்மாவின் கருத்து, வடகிழக்கு மக்கள் இன்றும் எதிர்கொள்ளும் சிறிய கண்கள் குறித்தான இனவெறியை எதிர்த்ததுடன் புன்னகையை பரப்பியது. சிறிய கண்கள் இருந்தால் நிறைய பலன்கள் உண்டு என்ற அமைச்சர், “எனது கண்களில் அழுக்கு குறைவாகவே நுழைகிறது. மேலும், அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியின் மேடையில் நான் இருக்கும்போது எளிதாக தூங்க முடியும்’’ என்று கலகலப்பூட்டியிருந்தார்.