Published:Updated:

பல ஆண்டு நட்பு; விரைவில் திருமணம்; நாக்பூர் பெண் டாக்டர்களின் காதல்!

பெண் டாக்டர் தம்பதி
News
பெண் டாக்டர் தம்பதி

``எனது எண்ணம் என் தந்தைக்கு 2013-ம் ஆண்டே தெரியும். சமீபத்தில் எனது முடிவை என் தாயிடமும் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆனாலும், என் மகிழ்ச்சிதான் அவர்களுக்கு முக்கியம் என்பதால் ஏற்றுக்கொண்டார்."

நாக்பூரை சேர்ந்த டாக்டர் சுர்பி மித்ராவும், டாக்டர் பரோமித்ராவும் நெருங்கிய தோழிகள். நாளடைவில் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக இருவரும் நாக்பூரில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். இதனை இருவரும் முறைப்படி அறிவித்தனர். அதோடு தங்களது திருமணத்தை விரைவில் கோவாவில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தனர்.

Ring (Representational Image)
Ring (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து டாக்டர் பரோமித்ரா கூறுகையில், ``எனது எண்ணம் என் தந்தைக்கு 2013-ம் ஆண்டே தெரியும். சமீபத்தில் எனது முடிவை என் தாயிடமும் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆனாலும், என் மகிழ்ச்சிதான் அவர்களுக்கு முக்கியம் என்பதால் ஏற்றுக்கொண்டார். வாழ்நாள் முழுவதும் இருவரும் இணைந்து இருக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். விரைவில் கோவாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

டாக்டர் சுர்பி மித்ரா கூறுகையில், ``என் தோழியைத் திருமணம் செய்யும் எனது முடிவுக்கு என் குடும்பத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் என் பெற்றோரிடம் தெரிவித்தபோது, அவர்கள் உண்மையில் மகிழ்ந்தனர். என்னிடம் பலரும் நான் இரட்டை வாழ்க்கை வாழ்வதாகக் கூறினர். ஆனால் நாங்கள் தம்பதியாக வாழப்போகிறோம்" என்று தெரிவித்தார்.

பெண் டாக்டர் தம்பதி
பெண் டாக்டர் தம்பதி

ஒரே பாலின திருமணங்களுக்கு மத்திய அரசு இன்னும் சட்ட அங்கீகாரம் கொடுக்காவிட்டாலும், அவை ஆங்காங்கே நடந்து வருகின்றன. சமீபத்தில் ஐதராபாத்தில் சுப்ரியா சக்ரவர்த்தி, அபய டாங்க் ஆகிய இரு ஆண்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தை திருநங்கை ஒருவர் நடத்தி வைத்தார். சுப்ரியா மற்றும் அபய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பில் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றங்கள் பெருகட்டும்!