Published:Updated:

நாக்பூர்: கொரோனாவால் கான்ஸ்டபிள், மனைவி மரணம்; தவிக்கும் இரு பெண் குழந்தைகள்!

கொரோனா - Represenational Image
கொரோனா - Represenational Image

நாக்பூரில் கான்ஸ்டபிளும் அவரின் மனைவியும் கொரோனாவிற்கு இறந்ததால் அவர்களின் 10 மற்றும் 14 வயது மகள்கள் நிராதரவாகியுள்ளனர்.

நாட்டில் கொரோனா எத்தனையோ உயிர்களை காவு வாங்கி வருகிறது. உயிரிழப்புகளால் எண்ணற்றோர் ஆதரவற்றவர்களாக மாறி இருக்கின்றனர். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு மக்களுக்கு இந்த கொரோனா இழப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது எப்போது முடியும் என்று தெரியவில்லை. வேலை வாய்ப்புகள் இல்லாமல் நகரங்களில் மக்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak

கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரும் நாடு முழுவதும் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிரமோத் நாராயண் ராவ் (51) என்ற கான்ஸ்டபிள் பணியாற்றி வந்தார். அவரின் மனைவி அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர்களுக்கு 10 மற்றும் 14 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து வந்தனர். கடந்த 13-ம் தேதி பிரமோத்தின் மனைவி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த பிரமோத்தும் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் பெண் குழந்தைகள் இருவரும் நிராதரவாகி உள்ளனர். இரண்டு குழந்தைகளையும் பார்த்து அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

India Covid Outbreak
India Covid Outbreak
AP Photo / Channi Anand

மகாராஷ்டிரா முழுவதும் 350-க்கும் அதிகமான போலீஸார் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் மட்டும் இதுவரை 12 போலீஸார் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு