Published:Updated:

NCHRO-வின் தடை: ``சட்டரீதியாக இதை எதிர்கொள்வோம்"- NCHRO அமைப்பின் தேசிய தலைவர் அ.மார்க்ஸ்

அ மார்க்ஸ் ( விகடன் )

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் NCHRO என்னும் மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை தடை செய்துள்ள நிலையில் இது குறித்து NCHRO என்னும் மனித உரிமை அமைப்பு அமைப்பின் தேசியத்தலைவர் அ. மார்க்ஸ் பேசியிருக்கிறார்.

NCHRO-வின் தடை: ``சட்டரீதியாக இதை எதிர்கொள்வோம்"- NCHRO அமைப்பின் தேசிய தலைவர் அ.மார்க்ஸ்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் NCHRO என்னும் மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை தடை செய்துள்ள நிலையில் இது குறித்து NCHRO என்னும் மனித உரிமை அமைப்பு அமைப்பின் தேசியத்தலைவர் அ. மார்க்ஸ் பேசியிருக்கிறார்.

Published:Updated:
அ மார்க்ஸ் ( விகடன் )

பிரதமர் மோடியை கொல்ல சதி, வன்முறையான பல போராட்டங்களை நடத்துவது மற்றும் மதக்கலவரங்களைத் தூண்டுவது போன்ற குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா மீது முன் வைக்கப்பட்டு அந்த அமைப்பையும், NCHRO என்னும் மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் மத்திய அரசு தடை செய்துள்ளது.

பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களைத் தூண்டி வருவதாக குற்றம் சாட்டி, அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில் கடந்த 22-ம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பினர் மட்டுமின்றி சில இஸ்லாமிய அமைப்புகளும், மதச்சார்பற்ற இயக்கங்களும் போராட்டத்தை நடத்தினர்.

சோதனை
சோதனை

நேற்று உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டு 250-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்திருந்தது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் NCHRO என்னும் மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஐந்தாண்டிற்குத் தடை செய்துள்ளது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்துள்ள மத்திய அரசு, NCHRO என்னும் மனித உரிமை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் தடை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக NCHRO அமைப்பின் தேசியத்தலைவரும், எழுத்தாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ. மார்க்ஸிடம் பேசினோம். "மத்திய அரசின் தடையைத் தொடர்ந்து NCHRO அமைப்பின் எல்லாச் செயற்பாடுகளையும் நிறுத்திவைத்துள்ளோம். சட்டரீதியாக இதை எதிர்கொள்வது குறித்து வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து வருகிறோம்" என்றார்.