கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவின் கோரதாண்டவத்தால் நாம் சந்தித்த பாதிப்புகளும் இழப்புகளும் ஏராளம். அவற்றில் உச்சகட்ட கொடுமை, கொரோனாவின் இரண்டு அலைகளிலும் உயிரிழந்த பலரின் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளைக் கண்காணிக்க பல மாநிலங்களிலும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்தியா முழுவதிலும் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவர்களில் 10,000 குழந்தைகள், தாய், தந்தை என இருவரையும் இழந்தவர்கள். எனவே, இந்த ஒன்றரை லட்சம் குந்தைகளுக்கும் இப்போது பாதுகாப்பு அவசியமாவதையும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 1, 2020 முதல் இதுவரையிலான பெருந்தொற்றுக் காலத்தில் கோவிட் மற்றும் பிற நோய்களால் 1,36,910 பேர் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளதாகவும், 10,094 குழந்தைகள் பெற்றோர்களில் இருவரையும் இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் ஸ்வரூபமா சதுர்வேதி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 488 குழந்தைகள் கைவிடப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் 0 - 13 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மாநிலவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒடிசா (24,405), அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1,9623), குஜராத் (14,770) மற்றும் தமிழ்நாடு (11,014) என அந்த எண்ணிக்கை செல்கிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் `பால் ஸ்வராஜ் போர்ட்டல்' - கோவிட் கேரில் பதிவேற்றப்பட்ட தரவு, இரண்டு பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளையும் உள்ளடக்கியது என்பதை வலியுறுத்துகிறது. இதில் கொரோனா தொற்று மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் இருவரையும் அல்லது ஒருவரை இழந்தவர்கள் என இரு பிரிவினரும் அடக்கம். ஏப்ரல் 2020 முதல் ஜனவரி 11, 2022 வரையிலான தரவு இது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் 8 முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள், அதாவது 59,010 பேர். 14 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகள் 22,763 பேர்.
- ராஜலட்சுமி