Published:Updated:

புதிய கல்விக் கொள்கை: `எப்படி சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது!’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``இந்தக் கல்விக் கொள்கையின் மாற்றங்கள் நாட்டுக்குத் திறமையான மாணவர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஆசிரியர்களையும் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை புதிய கல்விக் கொள்கைக்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. கல்விக் கொள்கையில் சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, கல்விக் கொள்கை மீதான விவாதங்கள் கல்வியாளர்களிடையே நடைபெற்று வருகின்றன. இந்தக் கல்விக் கொள்கைகளின் மீது கலவையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர் கல்வியில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாகப் பேசியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ``இந்தியாவில் 34 ஆண்டுக் காலமாக இருந்த கல்வி முறையை தேசிய கல்விக் கொள்கை மாற்றியமைக்கிறது. இதுவரை நமது கல்விக் கொள்கையில் என்ன சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வந்தோம். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இந்தக் கல்விக் கொள்கை பல்வேறு வழிகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான வாய்ப்புகளை இந்தக் கல்விக்கொள்கை வழங்குகிறது. இதன் வழியாக, மாணவர்கள் தங்களைத் தாங்களே மறு ஆய்வு செய்து கொள்ளவும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு அமைகிறது. இந்தக் கல்விக் கொள்கையின் மாற்றங்கள் நாட்டுக்குத் திறமையான மாணவர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஆசிரியர்களையும் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆசிரியர்களின் பயிற்சிக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்வழியாகத் தொடர்ந்து அவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்” என்றார்.

`புதிய கல்விக் கொள்கை தமிழ் மொழியாக்கம்!’ - சாதக, பாதகங்களைப் பகிரும் எழுத்தாளர் விழியன்

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ``தேசிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பல்வேறு சித்தாந்தங்களை உடையவர்களும் விவாதித்து வருகின்றனர். இந்த விவாதங்கள் நாட்டுக்கு ஆரோக்கியமான ஒன்றாகவும் கல்வித்துறைக்குப் பயனளிக்கும் விதமாகவும் உள்ளது. குறிப்பாக, கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்தக் கல்விக் கொள்கைகள் பக்கச் சார்புடையது என யாரும் சொல்லவில்லை. இந்த விஷயம் மிகவும் பெரியது. கல்விக் கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. தாய் மொழி வழியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும்போது அவர்களுக்கு பாடங்களைப் பற்றிய புரிதல் மிகவும் சிறப்பாக அமையும். எனவே, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வி என்பது மிகவும் உதவியாக இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள்
மாணவர்கள்
Representational Image

மேலும், ``கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நேரம் இது. இதைத்தான், தேசிய கல்விக் கொள்கை 2020 செய்கிறது. தரமான கல்வியை வழங்குவதில் நாங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான இடைவெளியை தேசிய கல்விக் கொள்கை குறைக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 - வரவேற்பும் எதிர்ப்பும்!
அடுத்த கட்டுரைக்கு