Published:Updated:

105 மணி நேரத்தில் 75 கி.மீ தூர சாலை - தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கின்னஸ் உலக சாதனை!

கின்னஸ் உலக சாதனை

105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் தூர சாலையை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உலக சாதனை படைத்திருக்கிறது.

105 மணி நேரத்தில் 75 கி.மீ தூர சாலை - தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கின்னஸ் உலக சாதனை!

105 மணி நேரத்தில் 75 கிலோமீட்டர் தூர சாலையை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உலக சாதனை படைத்திருக்கிறது.

Published:Updated:
கின்னஸ் உலக சாதனை

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கின்னஸ் உலக சாதனை படைத்திருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ``இந்தியாவின் 75 ஆண்டுக்கால சுதந்திரத்தை நினைவுகூரும்விதமாகவும், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் கீழும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India) கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி-அகோலா மாவட்டங்களுக்கு இடையே NH53-ல் ஒரே பாதையில் 105 மணி நேரம்... 33 நிமிடங்களில், 75 கிலோமீட்டர் தூரத்துக்கு பிட்மினஸ் கான்கிரீட் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

75 கி.மீ நீளம்கொண்ட ஒற்றைவழித் தொடர் பிட்மினஸ் கான்கிரீட் சாலையின் மொத்த நீளம் 37.5 கி.மீ. இருவழிப் பாதை என்பதால் 75 கி.மீ சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாலை அமைக்கும் பணிகள் ஜூன் 3, காலை 7:27 மணிக்குத் தொடங்கி, ஜூன் 7 அன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தன. 2,070 மெட்ரிக் டன் பிட்மினஸ் அடங்கிய 36,634 மெட்ரிக் டன் கலவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை
கோப்புப் படம்

இந்த உலக சாதனையை வெற்றிகரமாக முடிக்க உதவி, திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தியதற்காக NHAI, ராஜ் பாத் இன்ஃப்ராகான் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் அனைத்துப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள், தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் பணியை முடிக்க இரவு பகலாக உழைத்த சுயாதீன ஆலோசகர்கள் குழு உட்பட 720 பணியாளர்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதற்கு முன்பு 2019 பிப்ரவரியில் கத்தாரின் தோஹாவில் 25.275 கி.மீ தூரம் கட்டப்பட்ட பிட்மினஸ் பாதை, கின்னஸ் உலக சாதனை படைத்தது. இந்தப் பணியை முடிக்க 10 நாள்கள் ஆகின. ஆனால், NH 53 -ன் ஒரு பகுதியாக அமராவதி அகோலா பிரிவில் சேர்க்கப்பட்டது. இது கொல்கத்தா, ராய்பூர், நாக்பூர், சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் முக்கியமான பாதை. இந்தப் பாதை பணிகள் முடிந்தவுடன், இது சரக்கு போக்குவரத்தை எளிதாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism