Published:Updated:

`7 வருடங்கள்; மேல்முறையீடு நிராகரிப்பு!’ -நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

நிர்பயா வழக்கு

டிசம்பர் 29-ம் தேதி நிர்பயாவின் இறுதிமூச்சு நின்றது.

`7 வருடங்கள்; மேல்முறையீடு நிராகரிப்பு!’ -நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

டிசம்பர் 29-ம் தேதி நிர்பயாவின் இறுதிமூச்சு நின்றது.

Published:Updated:
நிர்பயா வழக்கு

டிசம்பர் 16.. இந்த நாளை டெல்லி மக்களால் எளிதில் மறக்க முடியாது. டெல்லி மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியது அந்த இரவில் நடந்த சம்பவம். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கொடூர வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 16, 2012 மருத்துவ மாணவி நிர்பயா டெல்லியில் பேருந்து ஒன்றில் தன் நண்பருடன் பயணித்துக்கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாடுமுழுவதும் போராட்டம் வெடித்தது. தலைநகர் டெல்லியில் மாணவர்கள் திரண்டனர். போராட்டங்கள் வன்முறையாக மாறின.

நிர்பயா வழக்கு
நிர்பயா வழக்கு

அடுத்தடுத்த நாள்களில் ஒரு சிறார் உட்பட 6 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ். நள்ளிரவில் நடந்த அந்தக் கொடூரம் குறித்து நிர்பயாவின் நண்பர் சாட்சியம் அளித்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிர்பயா தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து டிசம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சாட்சியம் அளித்தார். நிர்பயாவின் உடல்நிலை மோசமானதையடைத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டார். டிசம்பர் 29-ம் தேதி நிர்பயாவின் இறுதிமூச்சு நின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிறார் தவிர்த்து ஐந்து பேர் மீதும் கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் திட்டமிட்ட கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தது.

நிர்பயா
நிர்பயா

தன் மகளின் மரணத்துக்கு நியாயம் கேட்டு சட்டப்போராட்டத்தைக் கையிலெடுத்தார் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது விரைவு நீதிமன்றம். விரைவு நீதிமன்றத்தின் மரண தண்டனை பரிந்துரை மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் தொடங்கியது. 2014 மார்ச் மாதம் நான்கு பேருக்கான மரண தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மரண தண்டனையை தள்ளிவைக்கும் முயற்சியை தொடங்கியது குற்றவாளிகள் தரப்பு. 2014 மார்ச்-ல் தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 6 ஆண்டுகள் தூக்குத் தண்டனையை ஒத்திவைப்பதில் வெற்றிக்கண்டது குற்றவாளிகள் தரப்பு. திகார் சிறையில் பல நாடகங்களை அரங்கேற்றினர் நான்கு குற்றவாளிகளும்.

‘இந்த தேசம் நிர்பயா என நினைவில் வைத்துள்ள பெண்ணின் தாய் நான். இந்தியாவின் குழந்தை என அழைக்கும் முன்பே அவள் என் குழந்தை. என் மகளை என்னிடம் இருந்து பிரித்துச் சென்று 7 வருடங்கள் ஆகின்றன. நீதி கிடைக்கும் எனக் காத்திருக்கிறேன்’ என கண்ணீர் வடித்தார் ஆஷா தேவி.

நிர்பயா பெற்றோர்
நிர்பயா பெற்றோர்

2020 ஜனவரி 7-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. தண்டனையைத் தாமதப்படுத்தும் நோக்கில் குற்றவாளிகள் நால்வரும் தனித்தனியாக குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பியதால் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ஜனவரி 31-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் அதுவும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்தது. அதில் 2020 மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேதியும் மீண்டும் மாற்றப்பட்டது. மார்ச் 20-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

நேற்று (மார்ச் 19-ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்த நிர்பயாவின் தாயார், நாளை என் மகளுக்கு நீதி கிடைக்கும். இது எனக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு வீட்டினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இறுதியாக குற்றவாளிகள் தூக்கிலிடும்போதுதான் நான் நிம்மதியடைவேன்” என்றார்.

நிர்பயா தாய்
நிர்பயா தாய்

குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கலான மனு மீதான விசாரணை நேற்று இரவு 10 மணிக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளிகள் மீதுள்ள நிலுவை வழக்குகளையும் அக்‌ஷய் சிங் மனைவி தாக்கல் செய்த விவகாரத்து மனு குறித்தும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் கூறினார். `இரவு 10 மணிக்கு நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் உச்சநீதிமன்றமே நிராகரித்துவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு இறுதி நிலையை அடைந்துள்ளது. இந்தத் தீர்ப்பை நாங்கள் உட்கார்ந்து மறுபரிசீலனை செய்ய முடியாது” என்றனர் நீதிபதிகள்.

இந்த நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். சிறை நடவடிக்கைகள் முடிந்த பின்னர் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. தூக்குத் தண்டனை நிறைவேற்றபட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்பயாவின் தாய், ``இது எனக்கான நீதி அல்ல.. ஒட்டுமொத்த தேசத்துக்குமான நீதி. எனது நாடு எனக்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளது” என்றார் கண்ணீர் மல்க...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism