Published:Updated:

’மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் நிர்பயா குற்றவாளிகள்; புது ட்விஸ்ட்!’ - திகாரில் என்ன நடக்கிறது?!

நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மா

நிர்பயா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் கடுமையாக நடந்துகொள்வதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

’மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் நிர்பயா குற்றவாளிகள்; புது ட்விஸ்ட்!’ - திகாரில் என்ன நடக்கிறது?!

நிர்பயா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் கடுமையாக நடந்துகொள்வதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Published:Updated:
நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மா

என் மகளை இழந்த அன்றைய தினமே நான் இறந்துவிட்டேன். மார்ச் 3-ம் தேதி, எனக்கு இறுதியாக நீதி கிடைக்கும் என நம்பிக்கை இல்லை. கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊடகத்தில் பேசியிருந்தார். சட்ட உதவிகள் அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில், திகார் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் நான்கு பேரும் அங்கு மிகக் கடுமையாக நடந்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

நிர்பயா பெற்றோர்
நிர்பயா பெற்றோர்

நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் அது தள்ளிவைக்கப்பட்டது. நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குடியரசுத் தலைவருக்கு தனித்தனியே கருணை மனு அனுப்பியதன் காரணமாக, உரிய நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்ற முடியாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில்தான் 2020 மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, கடந்த 16-ம் தேதி சிறையில் உள்ள சுவற்றில் மோதி தன்னை காயப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்துள்ளார். இதைக் கண்ட சிறைக்காவலர்கள், அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் சிகிச்சையளித்துள்ளனர். பிப்ரவரி 17-ம் தேதி, நீதிமன்றத்தில் வினய் சர்மா வழக்கறிஞர் கூறுகையில், “திகார் சிறையில் இருக்கும் வினய் சர்மாவைக் காண்பதற்காக அவரது குடும்பத்தினர் சென்றிருந்தனர். அங்கு அவர், சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டிருந்தார். அவருக்கு, தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் தாயை அவரால் அடையாளம் காண முடியவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

நிர்பயா
நிர்பயா

சிறை நிர்வாகம் தரப்பில், குற்றவாளிகள் நால்வருக்கும் தினமும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அவர்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நால்வரையும் கவனமுடன் கையாள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், வினய் சர்மா டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனக்கு தலையில் காயமும் வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது. மன நிலையும் சரியாக இல்லை; என்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Representation image
Representation image

டெல்லி சிறைத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பிப்ரவரி 11-ம் தேதி, வினய் சர்மா சாப்பிடுவதைத் தவிர்த்தார். அதன்பின், மிகவும் மூர்க்கமாக நடந்துகொள்ளத் தொடங்கினார். தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ள முயற்சி செய்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதும், தங்களை காயப்படுத்திக் கொள்வதும் சகஜம்தான்.

மற்ற மூன்று குற்றவாளிகளிடமிருந்தும் வினய் வித்தியாசமாகத் தெரிகிறார். அவர், எரிச்சலூட்டும் விதமாக நடந்துகொள்கிறார். அவர் சுவற்றில் முட்டிக்கொள்வதைப் பார்த்த சிறை அதிகாரிகள், அவரை உடனே தடுத்துள்ளனர். அவருக்கு பெரிதாக காயம் எதும் ஏற்படவில்லை, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது” என்றார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், மருத்துவ அடிப்படையில் தங்களது குற்றங்களைத் தள்ளிவைக்க முடியுமா எனக் கேட்டால், சட்டநிபுணர்களிடமிருந்து ஆம் என்ற பதிலே கிடைக்கிறது. மருத்துவ அடிப்படையில் மரண தண்டனை ஒத்திவைப்பது தொடர்பாக டெல்லி சிறையில் இரண்டு விதிகள் உள்ளன. குற்றவாளிகள் உடல்ரீதியிலாகத் தயாராக இல்லையென்றால், தண்டனை நிறைவேற்றுவது தள்ளிவைக்கப்படும். இரண்டாவது, மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தண்டனை தள்ளிவைக்கப்படும் என டெல்லி சிறை நிர்வாக விதிகள் கூறுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism