Published:Updated:

`குறைபாடுகள் இருக்கலாம்; ஆனால் இதுதான் சட்டம்!' - வருத்தம் தெரிவித்த நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

`நான் நினைத்தபடி ஜிஎஸ்டி தொழில்துறையினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.'

ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டு ஆண்டுகள் கடந்தாலும் அதில் இன்னும் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என்பது வணிகர்களின் வாதமாக உள்ளது. இந்தநிலையில் இன்று புனேவில் நடந்த தொழில்துறையினர், வணிகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஜிஎஸ்டியில் குறைகள் உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். முன்னதாக வணிகர்கள் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

அதற்குப் பதிலளித்த அவர், ``நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் ஆலோசித்து ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. ஜிஎஸ்டி தொழில்துறையினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நான் நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. நான் நினைத்தபடி ஜிஎஸ்டி தொழில்துறையினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

`கொடுக்க முடியல; விரக்தியில் காரில் எறிந்தேன்!'- அழுத பெண்ணை ஆச்சர்யப்படுத்திய நிர்மலா சீதாராமன்

இதில் குறைகள் உள்ளன. தொழில்துறையினருக்கு சிரமங்களை கொடுத்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறன். உங்கள் அனுபவங்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கவலைகளை தெரிவிக்கிறீர்கள். எனக்குத் தெரியும். ஆனால், ஜிஎஸ்டி வரி சட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. இனி அதை நீக்க முடியாது. செயல்படுத்த ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தொழில்துறையினரும் வர்த்தகர்களும் யோசனை கொடுத்தால் அதை ஏற்று வரி முறையில் திருத்தம் செய்யலாம்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

ஆம், சில பகுதிகளில் ஜிஎஸ்டி வசூல் போதுமானதாக இல்லை. மகாராஷ்ட்ரா, கர்நாடகா, இமாசலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தப் பகுதிகளிலிருந்து வருமானம் தாக்கல் செய்வதை நாங்கள் ஒத்தி வைக்க வேண்டியிருந்தது. இதனால் ஜிஎஸ்டி வசூல் போதுமானதாக இல்லை" எனப் பேசினார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு