Published:Updated:

``சமோசாவுக்கு தட்டு, ஸ்பூன் தரல..!" - முதல்வர் ஹெல்ப்லைனுக்கு வந்த புகார்... அடுத்து என்ன நடந்தது?

சமோசா

சமோசாவுக்கு ஸ்பூன், தட்டு தரவில்லை என ஒருவர் முதல்வரின் ஹெல்ப்லைனுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் பேருந்து நிலையத்தில் ராகேஷ் சமோசா என்ற கடை இருக்கிறது. அந்தக் கடைக்கு எதிராக ஒருவர் மத்தியப் பிரதேச மாநில முதல்வரின் பிரத்யேக ஹெல்ப் லைன் எண்ணுக்கு வன்ஷ் பகதூர் என்ற நபர் அழைத்து புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், "சதர்பூர் பேருந்து நிலையத்தில் ராகேஷ் சமோசா என்ற பெயரில் ஒரு கடை உள்ளது. இந்த கடையில்தான் காலை உணவு வாங்கினேன். அந்தக் கடையில் வாங்கிய சமோசாவுக்கு ஸ்பூன் மற்றும் தட்டுகள் வழங்கப்படவில்லை. சமோசா பேக் செய்து தருபவர் சுத்தமாகவும் இல்லை. எனவே, தயவு செய்து பிரச்னையை சீக்கிரம் தீர்த்து விடுங்கள்" எனக் கூறியிருக்கிறார்.

 சமோசா
சமோசா

புகாரை முதல்வரின் ஹெல்ப்லைன் ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு ராகேஷ் சமோசா கடைக்குத் தொடர்பு கொண்டு விசாரித்து எச்சரிக்கப்பட்டது. `சமோசா விவகாரம் முதல்வரின் ஹெல்ப்லைன் வரை சென்றிருப்பது வேடிக்கையாக இருந்தாலும், சேவை குறைபாடு இருப்பின் புகார் அளிக்கலாம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்திருக்கிறது' என்கிறார்கள் இணையவாசிகள்.