Published:Updated:

`3 விபத்து; 0 உயிரிழப்பு; 2019 பாதுகாப்பான ஆண்டு!' ரயில்வே துறை பெருமிதம்

இந்திய ரயில்வே துறை
இந்திய ரயில்வே துறை

'2019-ம் ஆண்டு நடந்த ரயில் விபத்துகளில் ஒரு பயணிகூட உயிரிழக்கவில்லை' என ரயில்வே நிர்வாகம் புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு, இன்னும் மூன்று நாள்களில் நிறைவடைந்து புதிய ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு, இந்திய ரயில்வே துறைக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே போக்குவரத்து வரலாற்றில் 2019-ம் ஆண்டு, அதிக பாதுகாப்பான ஆண்டாக இருந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ரயில்
ரயில்

அதன்படி,`2019-ம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் எந்த ஒரு பயணியும் உயிரிழக்கவில்லை. கடந்த 2018-19 ம் ஆண்டு, 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் ரயில்வே ஊழியர்கள். இதே எண்ணிக்கை 2017-18 ம் ஆண்டில் 28 ஆகவும் 2016-17- ம் ஆண்டில் 195 ஆகவும் இருந்தது.

1990-95-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு ரயில் விபத்தினால் உயிரிழப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 500-க்கும் மேல் இருந்துள்ளது. அது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகான புள்ளிவிவரத்தில், அதாவது 2013-18-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு சராசரியாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆகவும் குறைந்துள்ளது.

ரயில்
ரயில்

சமீபகாலமாக, இந்த உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த ரயில்வே துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு, ரயில் விபத்துகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைந்துள்ளது. 2018-19 ஆண்டு நாடு முழுவதும் 3 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 2017- 18-ம் ஆண்டில் மட்டும், சுமார் 73 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது, அதிக ரயில் விபத்துகளை சந்தித்த ஆண்டாகக் கருதப்படுகிறது.

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்தது எப்படி? - ஹைதராபாத் ரயில் விபத்தின் பின்னணி

2016-17-ம் ஆண்டில் 10 விபத்துகளும், 2015-16 -ம் ஆண்டில் 20 மற்றும் 2014-15 -ம் ஆண்டில் 50 ரயில் விபத்துகளும் நடந்துள்ளன. 2019-ம் ஆண்டு, நாடு முழுவதும் சில ரயில் விபத்துகள் நடந்திருந்தாலும், அதனால் ஒரு பயணிகூட உயிரிழக்கவில்லை. அதே சமயம், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக இருந்துள்ளது. இருந்தும், ஒரு ரயில் ஓட்டுநர் மட்டும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரயில் விபத்து
ரயில் விபத்து

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதிய நடவடிக்கைகளே இந்த உயிரிழப்புகள் தவிர்ப்புக்குக் காரணம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நவீன கருவிகள் பயன்பாடு, பராமரிப்பு, ஆளில்லா ரயில்வே கிராஸிங் அகற்றம், ரயில் தடங்களைப் புதுப்பித்தல், நவீனமயமாக்கப்பட்ட சிக்னல் மற்றும் கள அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குதல் போன்றவையே, இந்த உயிரிழப்புகள் தடுப்புக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு