Published:Updated:

`உ.பியில் 3,000 டன் தங்க படிமங்கள் உண்மையா?’ - இந்திய புவியியல் ஆய்வு மையம் சொல்வதென்ன..

இந்திய புவியியல் ஆய்வு மையம்
இந்திய புவியியல் ஆய்வு மையம் ( Defencewatch.in )

உ.பியில் 3,000 டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கமளித்திருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் ஹார்தி மற்றும் சோனா பகதி ஆகிய பகுதிகளில் தங்கச் சுரங்கங்கள் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் அம்மாநில புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இதனல், இந்தியாவின் தங்க கையிருப்பு தற்போதைய நிலையை விட 5 மடங்கு அதிகரிக்கும் என்றும் பேசப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரி கே.கே.ராய்
சுங்கத்துறை அதிகாரி கே.கே.ராய்
ANI

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய சோன்பத்ரா மாவட்ட சுரங்கத்துறை அதிகாரி கே.க.ராய், ``சோன்பத்ராவில் தங்க படிமங்களைக் கண்டறியும் பணிகள் கடந்த 1992-93-ல் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டன. ஹார்தி மற்றும் சோனா பகதி ஆகிய பகுதிகளில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இ-டெண்டரிங் மூலம் சுரங்கங்களை ஏலம் விடும் பணி விரைவில் தொடங்கும்’ என்று கூறியிருந்தார்.

ஆனால், அந்தத் தகவலில் உண்மையில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் டைரக்டர் ஜெனரல் எம்.ஸ்ரீதர் தெரிவித்திருக்கிறார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சோன்பத்ரா மாவட்டத்தில் தங்க படிமங்கள் இருப்பதாக ஒரு தகவல் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் வழங்கப்படவில்லை. அந்த மாவட்டத்தில் அவ்வளாவு பெரிய அளவில் தங்க படிமங்கள் இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் கணக்கிடவில்லை’’ என்றார்.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி
ANI
`உ.பி-யில் கிடைத்துள்ள 3,000 டன் தங்கம்!’ - 5 மடங்காக உயரும் இந்திய இருப்பு?

மேலும் அவர் கூறுகையில், ``உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் தங்க படிமங்கள் குறித்த ஆய்வினை மேற்கொண்டோம். அப்படி தங்க படிமங்கள் இருப்பதாகத் தெரியவந்தால், அதுகுறித்து மாநில அரசுகளிடம் தெரிவிப்போம். ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து அம்மாநில சுரங்கத் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கு தங்கம் இருப்பதற்கான திருப்திகரமான முடிவுகளை அளிக்கவில்லை’’ என்றும் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு