Published:Updated:

`தாஜ்மஹாலில் இந்துக் கடவுள்களின் சிலைகள் ஏதுவும் இல்லை' - ஆர்.டி.ஐ கேள்விக்கு தொல்லியல்துறை பதில்

தாஜ்மஹால்

``இது போன்ற சமயத்தில் இப்படிச் சர்ச்சைகளை ஏற்படுத்துவது தாஜ்மஹாலுக்கு மட்டும் பாதிப்பைத் தராது. ஆக்ரா மற்றும் மொத்த நாடு குறித்த அபிப்ராயத்தையும் பாதிக்கும்.” - ஆக்ரா சுற்றுலா சங்கத் தலைவர்

`தாஜ்மஹாலில் இந்துக் கடவுள்களின் சிலைகள் ஏதுவும் இல்லை' - ஆர்.டி.ஐ கேள்விக்கு தொல்லியல்துறை பதில்

``இது போன்ற சமயத்தில் இப்படிச் சர்ச்சைகளை ஏற்படுத்துவது தாஜ்மஹாலுக்கு மட்டும் பாதிப்பைத் தராது. ஆக்ரா மற்றும் மொத்த நாடு குறித்த அபிப்ராயத்தையும் பாதிக்கும்.” - ஆக்ரா சுற்றுலா சங்கத் தலைவர்

Published:Updated:
தாஜ்மஹால்

தாஜ்மஹால், முன்பு அமைந்திருந்த இந்துக் கோயில் நிலத்தின் மீது கட்டப்பட்டிருக்கலாம் எனப் பல காலமாகவே ஒரு சர்ச்சைக்குரிய கருத்து நிலவிவருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தாஜ்மஹாலின் பேஸ்மென்ட் அறையில் இந்துக் கடவுள்கள் சம்பந்தப்பட்ட சிலை ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை, தாஜ்மஹாலின் அடித்தளத்தில் இந்துக் கடவுள்களின் சிலை எதுவும் இல்லை எனக் கூறியதோடு, தாஜ்மஹால் எந்தக் கோயில் நிலத்திலும் கட்டப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.

தாஜ்மஹாலின் அடித்தளத்தில் அமைந்துள்ள பூட்டப்பட்ட 20 அறைகளின் கீழும் இந்துக் கடவுள்களின் சிலை இல்லை என விளக்கம் தரப்பட்டுள்ளது.

`தாஜ்மஹாலில் இந்துக் கடவுள்களின் சிலைகள் ஏதுவும் இல்லை' - ஆர்.டி.ஐ கேள்விக்கு தொல்லியல்துறை பதில்

திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சகேத் கோக்லே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த விவரங்களைக் கோரியிருந்தார். அவருடைய கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்த மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் சந்த் மீனா, "இல்லை. எந்த விதமான கடவுலின் சிலையும் அடித்தளத்தில் இல்லை" என ஒற்றை வரியில் பதில் எழுதியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் தொடர்பாக ஆக்ரா சுற்றுலாச் சங்கத் தலைவர் பிரஹலாத் பிரசாத் கூறுகையில், "கோவிட் 19 காலத்தில் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்படைந்தது. இது போன்ற சமயத்தில் இப்படிச் சர்ச்சைகளை ஏற்படுத்துவது தாஜ்மஹாலுக்கு மட்டும் பாதிப்பைத் தராது. ஆக்ரா மற்றும் மொத்த நாடு குறித்த அபிப்ராயத்தையும் பாதிக்கும்" எனக் கூறினார்.

டிவிட்டரில் தாஜ்மஹால்!
டிவிட்டரில் தாஜ்மஹால்!

தாஜ்மஹால் குறித்துப் பல சர்ச்சைகள், பல காலகட்டங்களில் இருந்துள்ளன. வரலாற்றாசிரியர் பி.என்.ஓக் (P.N.Oak) தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தாஜ்மஹால் உண்மையில் ராஜ்புத்திர அரசர் ஒருவரால் கட்டப்பட்ட இந்துக் கோயில் எனக் குறிப்பிட்டிருந்தார். இது உண்மையில்லை எனப் பல வரலாற்றாசிரியர்கள் கூறினாலும், அந்தக் காலத்தில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 2000-ம் ஆண்டு தாஜ்மஹால் இந்து மன்னனால் கட்டப்பட்டது என தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.