Election bannerElection banner
Published:Updated:

`பணிநீக்கம் கிடையாது... அதேநேரம் சம்பள உயர்வும் கிடையாது!' -டி.சி.எஸ் நிறுவனம்

டி.சி.எஸ்
டி.சி.எஸ்

கடந்த மார்ச் மாத முடிவில், டி.சி.எஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 4,48,464 பேர். இதில், 36.2 சதவிகித ஊழியர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவைச் சந்தித்துவருகின்றன. இதில், இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.

இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில்துறை முடங்கியுள்ளதால், அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்து வருகின்றன.  இதனால், வேலையிழப்புகள் அதிகமாகும் என்கிற அச்சம் அனைவரின் மனத்திலும் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஐ.டி துறை சார்ந்த பணியாளர்களின் வேலை கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா கன்சல்டன்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 

Rajesh Gobinathan
Rajesh Gobinathan

``கடந்த மார்ச் காலாண்டில், டி.சி.எஸ் நிறுவனம் 8,049 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் 2 காலாண்டுகளும் மிகவும் கடினமாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி, ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பும் எண்ணம் நிறுவனத்துக்கு இல்லை. அதேநேரம், இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது. கல்லூரி வளாக நேர்காணலில் பணிக்குத் தேர்வான 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிச்சயமாக டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்" என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான  ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

Vikatan

கடந்த மார்ச் மாத முடிவில், டி.சி.எஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 4,48,464 பேர். இதில் 36.2 சதவிகித ஊழியர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு