Published:Updated:

`என்னை யாராலும் வீழ்த்த முடியாது’ - நெகிழ வைக்கும் மானஸ்ரீ-யின் சக்ஸஸ் கதை!

``தீபாவளி பண்டிகையின் போதும், என்னுடைய நண்பர்கள் எனது அருகில் அமர்ந்து வானத்தில் வெடிக்கும் பட்டாசுகளின் நிறம், வடிவங்கள் ஆகியவற்றை அழகாக விவரித்தனர்” என்று மானஸ்ரீ நண்பர்களைப் பற்றி நெகிழ்ந்து கூறினார்.

மானஸ்ரீ
மானஸ்ரீ ( facebook )

சில நேரங்களில் சில மனிதர்களின் கதைகள், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். மானஸ்ரீ சோமனின் கதையை, அதற்கு சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இன்ஸ்டாகிராமிலுள்ள `officialhumansofbombay’ என்ற பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த மானஸ்ரீயின் கதை இப்போது பலரின் இதயங்களை வென்று பலருக்கும் அவர் இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளார்.

``நான் பிறந்தபோது மருத்துவர்கள் பெற்றோர்களிடம், `அவளால் நடக்கவோ பேசவோ முடியாது' என்றனர். கூடுதலாக, அவளுக்குப் பார்வை குறைபாடும் உள்ளது’ என்றும் கூறியுள்ளனர். ஆனால், நான் அதிகமாகப் பேசக்கூடிய ஒருத்தியாக மாறுவேன் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது” என்று தன்னுடைய கதையை நினைவுகளிலிருந்து மீட்டு மானஸ்ரீ சொல்லத் தொடங்குகிறார்.

மானஸ்ரீ
மானஸ்ரீ
facebook

``பள்ளியில் சேர முயற்சி செய்தபோது என்னை அவர்கள் நிராகரித்தார்கள். ஏனெனில், எல்லாருடைய கவனமும் என் மீது இருக்கும் என்றும் என்னுடன் பயிலப்போகும் சாதாரணக் குழந்தைகளும் என்னால் கெட்டுவிடும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அங்குதான் அவர்கள் தவறையும் செய்தார்கள். நான் சாதாரணமாகத்தான் இருந்தேன். மற்றொரு, சாதாரணப் பள்ளிக்குச் சென்று படித்தேன். சாதித்தேன்” என்று தன்னம்பிக்கையுடன் பேசினார்.

தொடர்ந்து பேசிய மானஸ்ரீ, ``ஒரு ஃபேன்ஸி ட்ரஸ் போட்டியில் கலந்துகொள்ள புடவை அணிந்தது, இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்தப் போட்டி எனக்குச் சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதனால், சில நாள்களுக்கு முன்பே புடவை அணிந்து மேடைகளில் நடந்து பயிற்சி எடுத்துக்கொண்டேன். எங்கு, எப்படி பாட வேண்டும் என்றும் புரிந்துகொண்டேன். முதல் பரிசை வென்றேன்.

``சுனாமி பறித்துச்சென்ற என் 4 குழந்தைகளை மீண்டும் பெற்றெடுக்க ஆசைப்பட்டேன்!’’- மீனவப் பெண்ணின் கதை

என்னுடைய ஆசிரியர்களும், அவர்களின் பொதுவான பாதையிலிருந்து விலகி போட்டியில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள உதவி செய்தனர். பானை உடைக்கும் போட்டியில் கலந்துகொள்ள என்னுடைய ஆசிரியர் ஒருவர் உதவி செய்தார். என்னால் கொண்டாட்டமான மனநிலையை அப்போது, உணர முடிந்தது. தீபாவளி பண்டிகையின் போதும், என்னுடைய நண்பர்கள் எனது அருகில் அமர்ந்து வானத்தில் வெடிக்கும் பட்டாசுகளின் நிறம், வடிவங்கள் ஆகியவற்றை அழகாக விவரித்தனர்.

மானஸ்ரீ
மானஸ்ரீ
facebook

7-ம் வகுப்பு படிக்கும்போது பால ஸ்ரீ ஜனாதிபதி விருதை வென்றேன். அந்த விருதை அறிவிக்கும்போது நான் பள்ளியில் இல்லை. ஆனால், என்னுடைய நண்பர்கள் வகுப்பறையில் இருந்த பெஞ்சுகளின் மீது துள்ளிக் குதித்துக் கொண்டாடியுள்ளனர். ராஷ்டிரபதி பவனில் டாக்டர் அப்துல்கலாம் அவர்களிடமிருந்து இந்த விருதை வாங்கினேன். அவருக்காக ஒரு பாடலையும் பாடினேன்.

முதலில் கதை சொல்லி... இப்போ பொம்மலாட்டம்.. கவனம் ஈர்க்கும் தலைமை ஆசிரியர்!

கல்லூரி வாழ்க்கை எனக்கு வேறொரு உலகமாக இருந்தது. மரைன் லைன்ஸ்க்குப் பயணம் செய்யும்போது என்னுடைய அம்மாவும் என்னுடன் வருவார். பின்னர், கல்லூரியிலிருந்தும் அழைத்துச் செல்வார். சில நேரங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்படும். அவர், எந்த நிலையத்தில் இருந்தாலும் எனக்காகத் திரும்பி வர வேண்டும். எனது குடும்பத்தினர்தான் எப்போதும் முதலில் வருவார்கள், எங்கள் வீட்டின் மிகப்பெரிய விதியாக இது கடைப்பிடிக்கப்படுகிறது. எனது சகோதரியின் திருமணத்துக்கு முன் அவளது வருங்கால கணவரிடம், `என்ன நடந்தாலும் சரி, மானஸ்ரீதான் எனது முதல் அன்புக்குரியவள்’ என்பதை தெரிவித்திருக்கிறாள்.

மானஸ்ரீ
மானஸ்ரீ
facebook

எனது சகோதரி லண்டனில் வசித்தபோதும், என்னுடைய வேலை தொடர்பான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய ஆதரவாக இருந்தாள். கடந்த இரண்டு வருடங்களாக வங்கியில் பணியாற்றி வருகிறேன். கண்டிப்பாக, எனக்கு அதிகமான சவால்கள் இருக்கின்றன. வங்கியின் வாடிக்கையாளர்கள் நான் தூங்குவதாக நினைத்து நிர்வாகத்திடம் புகார் அளித்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. என்னுடன் பணி செய்பவர்கள் எனக்காகப் பேசியிருக்கின்றனர். யாரும் என்னை வீழ்த்த நான் அனுமதிப்பதில்லை. உண்மையாகவே, இது என்னைக் கடினமாக உழைக்க வைக்கிறது. என்னால் நிறுத்த முடியாது.

எனக்குள் ஒரு கதை இருப்பதை சில வருடங்களுக்கு முன்னால் உணர்ந்தேன். அது மக்களுக்குத் தெரிய வேண்டுமென நினைத்தேன். அதனால், ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். நான் பிறந்த நாளில் மருத்துவர் எனக்கான விதியைக் கூறியிருந்தார். ஆனால், இன்று நான் ஒரு எழுத்தாளராக இருக்கிறேன். எனக்குத் தேவையான பணத்தை நானே சம்பாதித்துக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வேலையில் இருக்கிறேன். என்னை நம்பும் மக்களாலும் என்னுடைய கனவுகளாலும் சூழப்பட்டிருக்கிறேன்” என்று பாசிட்டிவ் எனர்ஜியுடன் கூறினார்.

மானஸ்ரீ
மானஸ்ரீ
facebook

கடந்த ஜனவரி 9-ம் தேதி இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இவரது கதை பதிவு செய்யப்பட்டது. அன்றுமுதல் நெட்டிசன்கள் பலரும் மானஸ்ரீயைக் கொண்டாடி வருகின்றனர். இன்ஸ்டாவில் 68,000 பேரின் ஹார்டின்களை அள்ளியுள்ளார். `நீங்கள் ஒரு தேவதை’, `உங்களை விரும்புவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்’ என்பன போன்ற கமென்டுகளையும் நெட்டிசன்கள் பதிவு செய்து நெகிழ்ந்து வருகின்றனர்.

34 ஆண்டுகள்... 7 உயிர்கள்... மாறாத மீனவர்களின் கோரிக்கை! - நிஜ 'வடசென்னை' கதை