Published:Updated:

கேரளா செல்ல கட்டாய இ-பாஸ்! - தளர்வுகள் இல்லை... தவிப்பில் ஏலக்காய் விவசாயிகள்

குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி

கேரள மாநிலம் செல்ல இ-பாஸ் முறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், ஏலக்காய் விவசாயிகள் தங்களது தோட்டப் பணிகளைத் தொடர்வதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருக்கும் பெரும்பான்மையான ஏலக்காய் தோட்டங்கள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமானவை. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தங்களுக்குச் சொந்தமான ஏலக்காய் தோட்டங்களுக்கு விவசாயிகள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டது.

குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி
`பேருந்துகள் இயங்க அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை..!’- தமிழக அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

இ-பாஸ் முறையிலும் கேரள அரசு, கடுமையாக விதிகளை வகுத்ததால், ஏலக்காய் விவசாயிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். விவசாயிகள் மட்டுமல்லாமல், ஏலக்காய் தோட்டங்களுக்கு தினமும் தேனி மாவட்டத்திலிருந்து வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். `ஏலக்காய் சீஸன்’ எனக் கூறப்படும் ஜூன், ஜூலை மாதங்களில் தோட்டங்களைச் சீர் செய்து விளைச்சலைப் பெருக்க முடியாத நிலை உருவானது. இதனால், விவசாயிகள் நஷ்டமடைந்தது மட்டுமல்லாமல், பலரும் தங்களது தோட்டங்களைப் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இ-பாஸ் முறையில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதைக் கேரள அரசு கண்டுகொள்ளவில்லை.

குமுளி எல்லைப் பகுதி
குமுளி எல்லைப் பகுதி

இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துக்கு இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்த நிலையில், இடுக்கி மாவட்டத்திலுள்ள தங்களது ஏலக்காய் தோட்டங்களுக்கு இ-பாஸ் இன்றி எளிதாகச் சென்றுவர கேரள அரசு அனுமதி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பிலிருந்த ஏலக்காய் விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கேரளாவுக்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இடுக்கி கனமழை: `நீரில் மூழ்கிய ஏலக்காய் தோட்டங்கள்!’ - தவிக்கும் தமிழக விவசாயிகள்
குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி
மாநிலத்துக்கு வர `Covid19 Jagratha’ என்ற இணையப் பக்கத்தில், பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், எல்லையிலுள்ள சோதனைச் சாவடியில் அனுமதி கொடுக்கப்படும்.
கேரள அதிகாரிகள்

இதற்கிடையில், `இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுவிட்டது’ என்றும், `எல்லைக்குச் செல்லும் அனைவரையும் கேரளாவுக்குள் அனுமதிக்கின்றனர்’ என்றும் நேற்று வதந்தி பரவியது. இதை நம்பி, சில ஏலக்காய் விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் குமுளி சோதனைச் சாவடிக்குச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய கேரள வருவாய்துறை அதிகாரிகள், `இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது!’ என்று கூறி திருப்பி அனுப்பினர்.

குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி
‘இ-பாஸ் விதிமுறைகளைக் கடுமையாக்கிய கேரளம்’ - தவிக்கும் தேனி ஏலக்காய் விவசாயிகள்!

நம்மிடையே பேசிய ஏலக்காய் விவசாயி ஒருவர், ``கொரோனா ஆரம்பித்ததிலிருந்து எங்க தோட்டத்துக்குச் சரியா போய் வர முடியலை. அங்கே இருக்குற ஆளுகளைவெச்சுத்தான் வேலை செஞ்சுட்டு இருக்கோம். காய் எடுப்பும், பராமரிப்பும் சரியா பண்ண முடியலை. `மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் தேவையில்லை’னு மத்திய அரசு அறிவிச்சும், கேரள அரசு பிடிவாதமாக இ-பாஸ் வேணும், இடுக்கி மாவட்டத்துக்குள்ள வந்தா கட்டாயமா 14 நாள்கள் தனிமையில் இருக்கணும்சொல்லுது. தோட்டத்த்துக்கு தொழிலாளர்களை அழைச்சுட்டுப் போனாலும் இதே நிலைமைதான். இரு மாநில அரசுகளும் பேசி, ஏலக்காய் விவசாயம் நலிவடையாம பாதுகாக்கணும்” என்றார்.

குமுளி சோதனைச் சாவடி
குமுளி சோதனைச் சாவடி

கேரள வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ``மாநிலத்துக்குள் வர `Covid19 Jagratha’ என்ற இணையப் பக்கத்தில், பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், எல்லையிலுள்ள சோதனைச் சாவடியில் அனுமதி கொடுக்கப்படும். மாநிலத்துக்குள் வந்த பிறகு, கட்டாயம் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். அது, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். ஏலக்காய் விவசாயிகள், தோட்டங்களில் வேலை செய்ய தொழிலாளர்களை அழைத்து வந்தால், அது குறித்து எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும். எத்தனை தொழிலாளர்களை வேண்டுமானாலும் அழைத்துவரலாம். அவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த தேவையான வசதிகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்து பின்னர் அனுமதி கொடுக்கப்படும். இதில் எந்த மாற்றமும் தளர்வும் இல்லை. அப்படித் தளர்வுகள் குறித்து அரசு முடிவெடுத்தால், அது குறித்துத் தெரிவிக்கப்படும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு