Published:Updated:

`மாதத்தின் இடையில் வந்த அறிவிப்பு!'- மானியம் இல்லாத கேஸ் சிலிண்டருக்கு ரூ.145 அதிகரிப்பு

சமையல் கேஸ்
சமையல் கேஸ்

வழக்கமாக இந்த விலை உயர்வு அறிவிப்பு, மாதத்தின் முதல் நாளில்தான் வெளியாகும். விலையேற்றமும் கணிசமாகவே இருக்கும். இம்முறை விலையேற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில், மானியம் இல்லாத சிலிண்டர்களுக்கான விலை 145 ரூபாய்வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் ஒரு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 881 ரூபாயை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

சமையல் கேஸ்
சமையல் கேஸ்

இதன்படி, சென்னையில் மானியம் இல்லாத ஒரு கேஸ் சிலிண்டர் விலை 734 ரூபாயிலிருந்து 881 ரூபாயாக உயர்கிறது. மும்பையில் 684.50 ரூபாயிலிருந்து 829.50 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 747 ரூபாயிலிருந்து 896 ரூபாயாகவும் டெல்லியில் 714 ரூபாயிலிருந்து 858.50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

`ஒரேயொரு கேஸ் பில்தான்; ரூ. 4 லட்சத்தை ஏமாற்றினோம்!' - சென்னையில் கைதான வேலையில்லாத பட்டதாரிகள்

வழக்கமாக இந்த விலை உயர்வு அறிவிப்பு, மாதத்தின் முதல் நாளில்தான் வெளியாகும். விலையேற்றமும் கணிசமாகவே இருக்கும். இம்முறை விலையேற்றம் மிகப்பெரிய அளவில் இருப்பதோடு, மாதத்தின் இடையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் அப்போது இதுகுறித்த அறிவிப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

சமையல் கேஸ்
சமையல் கேஸ்

கடந்த ஐந்து மாத காலத்தில் மொத்தமாக 144 ரூபாய்வரை மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது ஒரே அறிவிப்பில் 145 ரூபாய்வரை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மானியம் இல்லாதவர்களுக்கு உயர்த்தியதைப்போல மானியம் உள்ளவர்களுக்கு எவ்வளவு உயர்த்துவார்களென்று தெரியவில்லை. ஏற்கெனவே மானியத்தொகை கொஞ்சம்கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் கேஸ் சிலிண்டருக்கான மானியம் முழுமையாக நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின் செல்ல