Published:Updated:

``மும்பையிலிருந்து பாலிவுட்டை எடுத்துச்செல்ல வரவில்லை” - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்

பகத்சிங் கொஷாரியுடன் சந்திப்பு
News
பகத்சிங் கொஷாரியுடன் சந்திப்பு

``மும்பையிலிருந்து பாலிவுட்டை உத்தரப்பிரதேசத்துக்கு எடுத்துச்செல்லும் திட்டமில்லை” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

``மும்பையிலிருந்து பாலிவுட்டை எடுத்துச்செல்ல வரவில்லை” - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்

``மும்பையிலிருந்து பாலிவுட்டை உத்தரப்பிரதேசத்துக்கு எடுத்துச்செல்லும் திட்டமில்லை” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பகத்சிங் கொஷாரியுடன் சந்திப்பு
News
பகத்சிங் கொஷாரியுடன் சந்திப்பு

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்துக்கு முதலீட்டை திரட்டுவதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று மும்பை வந்தார். அவர் இன்று தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ரோடு ஷோ ஒன்றையும் நடத்துகிறார். இதற்காக மும்பையிலிருந்து வெளியாகும் நாளிதழ்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிட்டுவருகிறார்கள். நேற்று மும்பையிலுள்ள உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு மாநில ஆளுநர் கொஷாரியையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனிருந்தார்.

மும்பை நிகழ்ச்சியில் ஆதித்யநாத்
மும்பை நிகழ்ச்சியில் ஆதித்யநாத்

மும்பையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``உத்தரப்பிரதேசத்தில் கட்டப்படும் திரைப்பட நகரம் ஆயிரம் ஏக்கர் பரப்பு கொண்டதாகும். உத்தரப்பிரதேசம், மும்பையிலிருந்து தொழில் அல்லது பாலிவுட்டை எடுத்துச்செல்லாது. மகாராஷ்டிராவுடன் ஆரோக்கியமான போட்டியையே நாங்கள் விரும்புகிறோம். எங்களது நோக்கம் பாலிவுட்டை உத்தரப்பிரதேசத்துக்கு எடுத்துச்செல்வது கிடையாது. சர்வதேச வசதியுடன் இருக்கும் திரைப்பட நகரத்தை பயன்படுத்திக்கொள்ள வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம். எனவே, யாரிடமிருந்தும் எதையும் பறிக்கவில்லை. இது இருதரப்பினருக்கிடையே ஆரோக்கியமான போட்டியாகும். அடுத்த ஐந்து ஆண்டில் உத்தரப்பிரதேசம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

கடந்த ஆறு ஆண்டுகளில் உத்தரப்பிரதேசம் அனைத்து செக்டரிலும் வளர்ச்சியடைந்திருக்கிறது. எனவே, ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்ட இது உதவியாக இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் 94 லட்சம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதோடு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருக்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. இப்போது தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். புல்டோசர் கட்டமைப்புப் பணி மற்றும் மேம்பாட்டுப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அது அமைதி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது.

யாராவது சட்டம் - ஒழுங்கை மீறினால் அதைக் கட்டுப்படுத்த புல்டோசர் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று மும்பை தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொள்வதற்காகவே ஆதித்யநாத் மும்பை வந்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் 1000 ஏக்கரில் திரைப்பட நகரம் கட்டப்பட்டிருக்கிறது. எனவே, மும்பையிலிருந்து பாலிவுட்டை எடுத்துச்செல்ல ஆதித்யநாத் வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.