Published:Updated:

‘முதலில் நோயாளியாக இருங்கள்... பிறகு நட்சத்திரமாகலாம்!’ -கனிகா கபூரை சாடும் மருத்துவர்

'கனிகா கபூர், ஒரு நோயாளியைப் போல நடந்துகொள்ளவில்லை' என அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இயக்குநர் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பரவலைத் தவிர்க்க பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இதையொட்டி, இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதற்கிடையில், பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், இந்தியாவில் உள்ள பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கனிகா, இந்த மாதம் 9-ம் தேதி லண்டனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். அப்போது, இவருக்கு வைரஸ் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்கள், தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு கூறிவருகிறது.

கனிகா கபூரின் லண்டன் பயணம் முதல் இப்போதைய கலவர நிலவரம் வரை என்ன நடந்தது? -ஒரு டைம்லைன் இங்கே!

ஆனால், கனிகா அதைப் பின்பற்றாமல் லக்னோவில் நடந்த இரண்டு, மூன்று பார்ட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். இந்த பார்ட்டிகளில் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதையடுத்து, தற்போது கனிகாவுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி லக்னோ போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அவர், லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.

கனிகா கபூர்
கனிகா கபூர்

இதற்கிடையே, கனிகா கலந்துகொண்ட விருந்தில் பங்கேற்ற அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களில் 28 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கனிகா தங்கியிருந்த குடியிருப்பில் உள்ள மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஒற்றை பார்ட்டி; ஜனாதிபதி டு எம்.பி வரை கொரோனா அச்சம்?! -பாலிவுட் பிரபலத்தால் கலங்கும் அரசியல்வாதிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கனிகா கபூர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் மருத்துவர். அவர் சிகிச்சை பெற்றுவரும் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே. திமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மருத்துவமனையில் உள்ள அனைத்து சிறப்பு வசதிகளும் பாடகி கனிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர், முதலில் நோயாளியாக நடந்துகொள்ள வேண்டும். இங்கு வந்து, தான் ஒரு பெரிய நட்சத்திரம் என்று குழந்தைத்தன பிடிவாதங்களையும் ஆத்திரங்களையும் வெளிப்படுத்தக்கூடாது.

லக்னோ மருத்துவமனை
லக்னோ மருத்துவமனை

அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அறையில் வசதியான கழிவறை, சிறந்த படுக்கை மற்றும் டி.வி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அவரது அறையில் தனியாகக் குளிர் சாதன வசதியும் உள்ளது. குளூட்டன் இல்லாத உணவே வழங்கப்பட்டுவருகிறது. அவரது உடல் குணமடைய வேண்டும் என்றால், முதலில் அவர் ஒரு நோயாளியாக நடந்துக்கொள்ள வேண்டும். நாங்கள் மிகுந்த அக்கறையுடன் அவருக்கு சிகிச்சையளித்துவருகிறோம். அவர் இங்கு நோயாளிதான், நட்சத்திரம் இல்லை. அவர் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிகா தனிமைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை, தூசுகள் உள்ளன எனக் குற்றம்சாட்டியதால், இயக்குநர் திமான் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு