Published:Updated:

`திருமண தம்பதிகளுக்கு காண்டம், கருத்தடை மாத்திரைகள் அடங்கிய கிஃப்ட் பேக்!' - ஒடிசா அரசு புது முயற்சி

திருமணம் ( சித்திரிப்புப் படம் )

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஒடிசா அரசு திருமண தம்பதிக்கு காண்டம், கருத்தடை மாத்திரைகள் அடங்கிய கிஃப்ட் பேக் ஒன்றை பரிசாக அளிக்க முடிவுசெய்திருக்கிறது.

`திருமண தம்பதிகளுக்கு காண்டம், கருத்தடை மாத்திரைகள் அடங்கிய கிஃப்ட் பேக்!' - ஒடிசா அரசு புது முயற்சி

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஒடிசா அரசு திருமண தம்பதிக்கு காண்டம், கருத்தடை மாத்திரைகள் அடங்கிய கிஃப்ட் பேக் ஒன்றை பரிசாக அளிக்க முடிவுசெய்திருக்கிறது.

Published:Updated:
திருமணம் ( சித்திரிப்புப் படம் )

நாட்டில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் சீன மக்கள் தொகையை இந்தியா முந்திவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஒடிசா அரசு மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதுமண தம்பதிகளுக்கு திருமண கிஃப்ட் பேக் ஒன்றை பரிசாகக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அதில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான புத்தகம், காண்டம், கருத்தடை மாத்திரைகள், திருமணப் பதிவு சான்று உள்ளிட்டவை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தவிர மணப்பெண்ணுக்குத் தேவையான சீப்பு, கண்ணாடி, நகம் வெட்டும் கருவி, கர்ச்சீப், டவல் , வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்துகொள்ளும் சாதனமும் கிஃப்ட் பேக்கில் இடம்பெற்றிருக்குமாம்.

திருமணம்
திருமணம்
சித்திரிப்புப் படம்

இந்தத் திட்டம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மாநில தேசிய சுகாதார திட்ட இயக்குநர் சாலினி பண்டிட், ``ஒடிசாவில் குழந்தை பிறப்பு விகிதம் தேசிய அளவை ஒப்பிடுகையில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனாலும் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசு பேக்கை புதுமண தம்பதியிடம் கொண்டு சேர்க்க சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக திருமணம் செய்துகொள்பவர்களின் வீட்டிற்கே சென்று இந்த திருமண பரிசு பேக்கை கொடுக்கவிருக்கிறோம்.

திருமணம்
திருமணம்
சித்திரிப்புப் படம்

செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. இதை தம்பதியினர் சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தகுதியுள்ள தம்பதிக்கு கருத்தடை இஞ்செக்சன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.