Published:Updated:

உதவிப் பேராசிரியரை பல்கலைக்கழகம் புகுந்து தாக்கிய மனைவி; காப்பாற்றப் போராடிய ஊழியர்கள்-என்ன நடந்தது?

பல்கலைக்கழகம் புகுந்து தாக்கிய மனைவி ( ட்விட்டர் )

உதவிப் பேராசிரியரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து அவருடைய மனைவி செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ஒடிசா மாநிலத்தில் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார் அனில் குமார் திரியா. இவரை அண்மையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து அவருடைய மனைவி செருப்பால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த சனிக்கிழமை காலை 11:30 மணி அளவில் உதவிப் பேராசிரியர் அவருடைய அறையில் இருந்தபோது, அவருடைய மனைவி திடீரென அறைக்குள் நுழைந்திருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய செருப்பை எடுத்து அவரைத் தாக்கியிருக்கிறார். அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.

பல்கலைக்கழகத்தில் கணவரை செருப்பால் அடித்த பெண்
பல்கலைக்கழகத்தில் கணவரை செருப்பால் அடித்த பெண்
ட்விட்டர்

இந்தச் சம்பவத்தை அறையின் ஜன்னல் வழியாக யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். உதவிப் பேராசிரியரின் கூச்சல் சத்தம் கேட்டு, பல்கலைக்கழக ஊழியர்கள் அங்கு வந்து கதவைத் திறக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் அவர்களின் சொல்லுக்கு செவி சாய்க்காத காரணத்தால், உதவிப் பேராசிரியரைக் காப்பாற்ற பாதுகாப்பு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அதன் பிறகு கதவைத் திறந்து உதவிப் பேராசிரியர் மீட்கப்பட்டார். மேலும், பல்கலைக்கழக ஊழியர்கள் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். ஆனால், அவர் எதற்காகத் தன்னுடைய கணவரை அப்படித் தாக்கினார் என்பது தெரியவில்லை.