Published:Updated:

``விபத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்!" - சைரஸ் மிஸ்த்ரி மரணம் குறித்து மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

"டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்து குறித்து விசாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம்." - மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்

``விபத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்!" - சைரஸ் மிஸ்த்ரி மரணம் குறித்து மெர்சிடிஸ் பென்ஸ்

"டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்து குறித்து விசாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம்." - மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்

Published:Updated:
மெர்சிடிஸ் பென்ஸ்

டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும், கட்டுமான நிறுவனமான சாபூர்ஜி பாலோன்ஜி நிறுவனத்தின் தலைவருமான சைரஸ் மிஸ்த்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மும்பை அருகே பால்கர் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். சைரஸ் மிஸ்த்ரி மரணம் தொழில்துறையினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சைரஸ் மிஸ்த்ரியுடன் பயணம் செய்த அவரின் நண்பர் ஜஹாங்கிர் என்பவரும் விபத்தில் காலமானார். சைரஸ் மிஸ்த்ரி சென்ற கார் பால்கர் அருகே சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழப்பதற்கு காரணம் சைரஸ் காரில் பயணம் செய்தபோது சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதோடு காரில் இருந்த ஏர்பேக் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சைரஸ் மிஸ்த்ரியின் மரணம் குறித்து செவ்வாய்க்கிழமை சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) இந்தியா, அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சைரஸ் மிஸ்த்ரி
சைரஸ் மிஸ்த்ரி

அதில், ``வாடிக்கையாளரின் தனியுரிமையை மதிக்கும் பொறுப்பான பிராண்டான எங்கள் குழு, முடிந்தவரை அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான எந்த விளக்கங்களையும் நேரடியாகவே வழங்குவோம். துரதிஷ்டவசமான சாலை விபத்தில் சைரஸ் மிஸ்த்ரி, ஜஹாங்கீர் பண்டோல் ஆகியோரின் அகால மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அதே நேரத்தில், காரில் பயணித்த மற்ற இருவரான அனாஹிதா பந்தோல், டேரியஸ் பண்டோல் ஆகியோர் குணமடைந்து வருகின்றனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். மேலும், எங்கள் நிறுவன வாகனங்களில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் -
மெர்சிடிஸ் பென்ஸ் -

அதே நேரம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். விசாரணைக்கு உதவ, நிறுவனத்தின் ஒரு குழு வாகனத்தின் தரவை மேலும் பகுப்பாய்வுக்காக டிகோட் செய்யச் சேகரித்திருக்கிறது. Mercedes-Benz நிறுவனத்தின் அதிகாரிகள் அதைப் பார்வையிட்டு விபத்துக்குள்ளான காரில் இருந்து மறைக்கப்பட்ட தரவுகளைச் சேகரித்து, தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு, விசாரணைக்காக காவல்துறையுடன் பகிர்ந்துகொள்ளப்படும்" எனத் தெரிவித்திருக்கிறது.