Published:Updated:

IRCTC: `ரயில் பயணத்தின்போது வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்வது எப்படி?' - புதிய அறிவிப்பு

Representational image

இரயில் பயணத்தின்போது, பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமே உணவை ஆர்டர் செய்துக்கொள்ளலாம்.

IRCTC: `ரயில் பயணத்தின்போது வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்வது எப்படி?' - புதிய அறிவிப்பு

இரயில் பயணத்தின்போது, பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலமே உணவை ஆர்டர் செய்துக்கொள்ளலாம்.

Published:Updated:
Representational image

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) உணவு விநியோக சேவையான ஜூப் (Zoop), சமீபத்தில் ஜியோ ஹாப்டிக் உடன் இணைந்து பயணிகள் தங்களது வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பயணியின் பிஎன்ஆர் (PNR)எண்ணை வைத்து இருக்கைகே உணவைக் கொண்டு வந்து டெலிவரி செய்யும்வகையில் வடிவமைத்துள்ளனர். பயனர்கள் இதற்காக எந்த ஒரு ஆப்களையும் பதிவிறக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஆர்டர் செய்தபின் உங்கள் போனிலிருந்தே உணவை டிராக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம். ஆர்டர் தொடர்பான கருத்துகளையும் பதிவிட்டு மேம்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC
IRCTC

வாட்ஸ்அப் மூலம் ரயிலில் உணவை ஆர்டர் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு முதலில் இந்த +91 7042062070 எண்ணிற்கு மெசேஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது (https://wa.me/917042062070) என்ற தளத்தின் மூலமாகவோ ஜூப் சாட்போட்டிற்கு சென்று உணவை ஆர்டர் செய்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப் ஜூப் சாட்போட்டிற்கு சென்றவுடன் உங்களது 10 இலக்க பிஎன்ஆர் (PNR number) எண்ணைப் பதிவிட்டால் தானாகவே உங்கள் ரயில், பெட்டி, இருக்கை ஆகியவற்றை கணித்துவிடும். பின், உங்கள் தகவல்களை சரிபார்க்க சொல்லும். அதன்பின் அடுத்து வரும் ரயில் நிலையத்தை குறிப்பிடும்படி கேட்கும்.

அதை நீங்கள் குறிப்பிட்டப்பின் உங்கள் உணவை ஆர்டர் செய்துக்கொள்ளலாம். ஆர்டர் செய்த உணவு உங்கள் இருப்பிடத்திற்கே வந்துவிடும்.