Published:Updated:

``மூன்று மாதங்களில் இரண்டாவது முறை..!" - பாஜக எம்.எல்.ஏ-வின் சர்ச்சைக் கருத்துக்கு பாகிஸ்தான் கணடனம்

இந்தியா - பாகிஸ்தான்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்குக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

``மூன்று மாதங்களில் இரண்டாவது முறை..!" - பாஜக எம்.எல்.ஏ-வின் சர்ச்சைக் கருத்துக்கு பாகிஸ்தான் கணடனம்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங்குக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
இந்தியா - பாகிஸ்தான்

தெலங்கானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் என்பவர் இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குறிய கருத்துகளைப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இஸ்லாமியர்கள் ராஜா சிங்குக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ராஜா சிங்கை தெலங்கானா காவல்துறை கைதுசெய்தது.மேலும் அவரை பா.ஜ.க மேலிடம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருக்கிறது. நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய ராஜா சிங்குக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக எம் எல் ஏ
பாஜக எம் எல் ஏ
ட்விட்டர்

இந்த நிலையில், பா.ஜ.க-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் இந்த மிகவும் இழிவான கருத்துகள் பாகிஸ்தான் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியிருக்கின்றன.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்

கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக பா.ஜ.க தலைவர்கள் இது மாதிரியான கருத்தை தெரிவித்திருக்கின்றனர். தொடர்ச்சியாக முஸ்லிம்களை புண்படுத்தும் பா.ஜ.க தலைவர்களின் தாக்குதல் கருத்துகளை நிறுத்த இந்திய அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா சிங்குக்கு எதிராக பா.ஜ.க எடுத்த ஒழுங்கு நடவடிக்கை இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வலி மற்றும் வேதனையைத் தணிக்க முடியாது'' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.