Published:Updated:

சமூக வலைதள நெருக்கடி; முஸ்லிம் வாலிபருடன் நடக்கவிருந்த மகளின் திருமணத்தை நிறுத்திய மும்பை பெற்றோர்!

Marriage - Representational Image
Marriage - Representational Image

சமூக வலைதளத்தில் அத்திருமணத்திற்கு எதிராக ஏராளமானோர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனை `லவ் ஜிஹாத்' என்று பலரும் விமர்சனம் செய்தனர். பெண் வீட்டாருக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டிருந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இந்துப் பெண்ணுக்கு, முஸ்லிம் வாலிபருடன் வரும் 18-ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. பெண்ணும், மாப்பிள்ளையும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் முறைப்படி இப்போது திருமணம் செய்ய திருமண அழைப்பிதழ் அச்சடித்திருந்தனர். அந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வெளியானது. இதனால் சமூக வலைதளத்தில் அத்திருமணத்திற்கு எதிராக ஏராளமானோர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்தனர். இதனை `லவ் ஜிஹாத்' என்று பலரும் விமர்சனம் செய்தனர். பெண் வீட்டாருக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டிருந்தது.

Couple
Couple
Representational Image
நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை காதல் திருமணம் வெல்லுமிடம் இதுதான்! #AllAboutLove - 22

இதையடுத்து பெண்ணின் தந்தை பிரசாத், தன் மகளின் திருமணத்தை நிறுத்திவிட்டார். நகைக்கடை உரிமையாளரான அவர், தனது சமுதாயத்தினருக்கு இது தொடர்பாக முறைப்படி கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ``தற்போதுள்ள சூழ்நிலையில் 18-ம் தேதி நடக்க இருந்த திருமணத்தை நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வெளியானதால், திருமணத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. என் மகளும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறவரும் ஏற்கெனவே கடந்த மே மாதமே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் சேர்ந்து வாழ்வார்களா என்று தெரியவில்லை. பதிவுத் திருமணம் செய்த நாளில் இருந்து என் மகள் எனது வீட்டில்தான் இருக்கிறாள்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்து முறைப்படி அப்பெண் வரும் 18-ம் தேதி திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருந்தார். மணப்பெண்ணுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாப்பிள்ளை ட்யூஷன் சொல்லிக்கொடுத்தார். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவர்களது திருமணத்தை பதிவு செய்த போது பெண்ணின் சமுதாயத்தில் பெரிய அளவில் எந்த வித எதிர்ப்பும் இல்லை.

ஆனால் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வெளியான பிறகுதான், பெண்ணின் குடும்பத்திற்கு அவர்களது சமுதாயத்தில் இருந்து கடுமையான நெருக்கடி ஏற்பட்டது என்று மணமகள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகிறார்.

திருமணம்
திருமணம்
representational image

இத்திருமணம் குறித்து சமூக வலைதளத்திலும் பெரிய அளவில் சர்ச்சைகளை பரப்பியதோடு, சிலர் பெண்ணின் தந்தைக்கு போன் செய்து மிரட்டவும் செய்தனர். அவர்கள் சார்ந்த சமூக அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் பெண்ணின் தந்தை, திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இது குறித்து குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து இத்திருமணத்தை ரத்து செய்வது என்று முடிவு செய்தார். அதை முறைப்படி தனது சமுதாய அமைப்பிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு