Published:Updated:

கொரோனா: `30 எம்.பி-க்கள்; 50 ஊழியர்கள்’- முன்னதாகவே முடிக்கப்படும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

18 நாள்கள் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடித்துக்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா பரவல் அச்சத்தால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட, அவை காலவரையின்றி கடந்த மார்ச்சில் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்தநிலையில், `ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்’ என்ற விதியால், இரு அவைகளும் கடந்த 14-ம் தேதி கூடின. `கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அக்டோபர் 1-ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
-

அதன்படி, கடந்த 14-ம் தேதி முதல் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளோடு நடந்துவருகின்றன. இந்தநிலையில், அவை கூடுவதற்கு முன்பாக எம்.பி-க்கள் மறும் மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... பலே திட்டங்களுடன் தமிழக எம்.பிக்கள்!

இதில், பா.ஜ.க எம்.பி-க்கள் உட்பட சுமார் 30 உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், மக்களவை, மாநிலங்களவைச் செயலக ஊழியர்கள் ஏறக்குறைய 50 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்துவருகிறது. சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 93,337 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 53 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

எதிர்பார்த்ததைவிட கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படும் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முடித்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அவசர மக்களவை அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்துக்கு சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்திருக்கிறார். அதன்படி இன்று மாலை 6 மணியளவில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு