Published:Updated:

`பதான் படத்தைத் தடைசெய்ய வேண்டும்’ - ஷாருக் கான், தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டம்

ஷாருக் கான்
News
ஷாருக் கான்

`பதான்’ படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி ஷாருக் கான், தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

`பதான் படத்தைத் தடைசெய்ய வேண்டும்’ - ஷாருக் கான், தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டம்

`பதான்’ படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி ஷாருக் கான், தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.

Published:Updated:
ஷாருக் கான்
News
ஷாருக் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் `பதான்’ படத்தின் முதல் பாடல் சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இதில் நடிகை தீபிகா படுகோன் உடை படுகவர்ச்சியாக இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வீர சிவாஜி குரூப்பைச் சேர்ந்தவர்கள் ஷாருக் கான், படத்தின் நாயகி தீபிகா படுகோன் ஆகியோரி கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர். படத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இந்து மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

`பதான் படத்தைத் தடைசெய்ய வேண்டும்’ - ஷாருக் கான், தீபிகா படுகோன் கொடும்பாவியை எரித்து போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஷாருக் கானின் கொடும்பாவியைச் செருப்பால் அடிப்பது போன்ற வீடியோ ட்விட்டரில் வெளியாகியிருக்கிறது. `பதான்’ படத்தைத் தடைசெய்வது குறித்து மத்தியப் பிரதேச அரசு பரிசீலித்துவருகிறது. இது குறித்து அந்த மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அளித்த பேட்டியில், `` `பதான்’ படத்தின் பாடலில் ஷாருக் கான், தீபிகா படுகோனேயின் ஆடைகள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய வேண்டும். ஆட்சேபத்துக்குரிய பகுதியை நீக்க வேண்டும். அப்படிச் சரி செய்யவில்லையெனில் படத்தைத் தடை செய்வது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும்” என்று தெரிவித்தார்.

இதே போன்று சம்ஸ்கிருத பச்சோ மஞ்ச் தலைவர் சந்திரசேகர் திவாரியும் `பதான்’ படத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள காவி கலருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ``காவி கலரை அவமதிக்கும் வகையில் இந்தப் படத்தின் படப்பாடல் இடம்பெற்றிருக்கிறது. இதை எங்களது அமைப்பு ஏற்றுக்கொள்ளாது. இந்துக்கள் உங்களை (ஷாருக் கான்) புறக்கணிக்கும்போது வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்கிறீர்கள். படம் வெளியாவதற்கு முன்பு வைஷ்ணவி கோயிலுக்குச் செல்கிறீர்கள். அனைத்து இந்துக்களிடமும் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். உங்களை இந்திய மக்கள் சூப்பர் ஸ்டாராக மாற்றினார்கள். எனவே `பதான்’ படப் பாடலை உடனே அகற்ற வேண்டும். இது போன்ற செயல்களால் உங்களது தரத்தை ஏன் குறைத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். `பதான்’ படத்தை யஷ்ராஜ் ஃபிலிம் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த மாதம் 25-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.