Published:Updated:

`அதுவும் பாலியல் வன்புணர்வே!' - அதிரடி தீர்ப்புக்கு விளக்கம் அளித்த கேரள உயர் நீதிமன்றம்

Court -Representaional Image
Court -Representaional Image

ஆறு வருடங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் வயிற்றுவலியால் பாதிக்கப்பட அச்சிறுமியை அவரின் தாய் எர்ணாகுளம் மாவட்டத்தில் அப்போது நடந்த மருத்துவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பாலுறவு விழைவுக்காக ஓர் ஆண் ஒரு பெண்ணின் எந்தவோர் உடல் பாகத்தைப் பயன்படுத்தினாலும், அது நுழைத்தல் செயலாக இல்லாமல் இருந்தாலும் (Non- penetrative), இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அது பாலியல் வன்புணர்வாகவே (Rape) கருதப்படும் என்று கேரள உயர்நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் வயிற்றுவலியால் பாதிக்கப்பட, அச்சிறுமியை அவரின் தாய் எர்ணாகுளம் மாவட்டத்தில் அப்போது நடந்த மருத்துவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Child Abuse (Representational Image)
Child Abuse (Representational Image)
``அவரையே திருமணம் செய்துகொள்கிறேன்!"- சிறார் வதை செய்த பாதிரியாருக்காக பாதிக்கப்பட்ட பெண் ஜாமின் மனு

அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையின்போது, பக்கத்துக்கு வீட்டு நபரால் தனக்கு ஏற்பட்ட தொடர் சிறார் வதை குறித்து மருத்துவரிடம் அச்சிறுமி தெரிவித்திருக்கிறார். மருத்துவர் இதுகுறித்து அச்சிறுமியியின் தாயிடம் தெரிவிக்க, அக்கம் பக்கத்தினர் என்ன சொல்வார்களோ என்று நினைத்த அந்தத் தாய் தன் மகளுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து காவல்துறையில் புகார் கொடுக்காமல் தயங்கி இருந்திருக்கிறார். ஆனால் இதுகுறித்து குழந்தைகள்நல அதிகாரிகளுக்குத் தெரியவர அதன் பின்னரே பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் பின்னர் குற்றவாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டதால் அந்த நபர் குற்றவாளியே என்று தீர்ப்பளித்த கேரள கீழமை நீதிமன்றம் குற்றவாளிக்கு அபராதம் விதித்ததோடு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளியின் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த ஆறு மாதம் கழித்து ஏன் தன்மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது என்று கேள்வி எழுப்பிய குற்றவாளி, தான் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாதிட்டிருக்கிறார்.

Court - Representational Image
Court - Representational Image
``குழந்தை பெற்றுக்கொள்ள கணவருக்கு ஜாமீன் வேண்டும்!" - உயர்நீதிமன்றத்தை நாடிய மனைவி

ஆனால் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட அச்சிறுமி விரிவான வாக்குமூலம் கொடுத்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள கேரள உயர்நீதிமன்றம், சிறுமியின் தொடைகளுக்கு இடையில் தனது ஆணுறுப்பை தேய்த்தது, தனது ஆணுறுப்பை அச்சிறுமியின் வாயில் வைக்க முயற்சித்தது போன்ற அந்தக் குற்றவாளியின் வக்கிரச் செயல்களுக்கு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

நுழைத்தல் செயல் இல்லாத போதும், பாலுறவு விழைவுக்காக ஓர் ஆண் ஒரு பெண்ணின் எந்தவோர் உடல் பாகத்தைப் பயன்படுத்தினாலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அது பாலியல் வன்புணர்வாகவே கருதப்படும் என்கிற அதிரடித் தீர்ப்பை வழங்கிய கேரள உயர்நீதிமன்றம், குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் உறுதி செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு