Published:Updated:

வாகன விபத்தில் இறந்தகிடந்த நபர்; சிதறிக்கிடந்த தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்! - வைரல் வீடியோ

தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்

வாகன விபத்தில் இறந்துகிடந்த நபரைப் பொருட்படுத்தாமல், கீழே கொட்டிக்கிடந்த தக்காளியைப் பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

வாகன விபத்தில் இறந்தகிடந்த நபர்; சிதறிக்கிடந்த தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்! - வைரல் வீடியோ

வாகன விபத்தில் இறந்துகிடந்த நபரைப் பொருட்படுத்தாமல், கீழே கொட்டிக்கிடந்த தக்காளியைப் பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Published:Updated:
தக்காளியை அள்ளிச்சென்ற மக்கள்

வாகன விபத்தில் அடிபட்டு இறந்துகிடந்த நபரைப் பொருட்படுத்தாமல், கீழே சிதறிக்கிடந்த தக்காளியை பொதுமக்கள் அள்ளிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பீகார் மாநிலத்தில் தக்காளி ஏற்றிவந்த டெம்போவும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தின் காரணமாக பிஷன்பூர் பகுதியைச் சேர்ந்த அஷோக் தாகூர் என்பவரின் மகன் விஜய்குமார் (45) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டெம்போவும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாகனத்திலிருந்த தக்காளி கீழே கொட்டியது. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், விபத்தைப் பொருட்படுத்தாமல், சிதறிக்கிடந்த தக்காளியை ஓடிச் சென்று எடுத்தனர். பொதுமக்கள் தக்காளியை அள்ளிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த விபத்து தொடர்பாக, போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விபத்தில் உயிரிழந்த விஜயகுமாரின் உடலை மீட்டு... பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தற்போது இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.