Published:Updated:

நாக்பூர்: கேட்டதைவிட 5 மடங்கு அதிகமாகப் பணம் கொடுத்த ஏடிஎம்... படையெடுத்துச் சென்ற மக்கள்!

ஏடிஎம் - வரிசையில் மக்கள் ( சித்திரிப்புப் படம் )

நாக்பூரில் கேட்டதைவிட ஐந்து மடங்கு அதிகமாக ஏ.டி.எம் மெஷின் பணம் வழங்கியதால் மக்கள் பணம் எடுக்க விரைந்தனர்.

நாக்பூர்: கேட்டதைவிட 5 மடங்கு அதிகமாகப் பணம் கொடுத்த ஏடிஎம்... படையெடுத்துச் சென்ற மக்கள்!

நாக்பூரில் கேட்டதைவிட ஐந்து மடங்கு அதிகமாக ஏ.டி.எம் மெஷின் பணம் வழங்கியதால் மக்கள் பணம் எடுக்க விரைந்தனர்.

Published:Updated:
ஏடிஎம் - வரிசையில் மக்கள் ( சித்திரிப்புப் படம் )

ஏ.டி.எம் சென்டரில் பணம் எடுக்கப் போகும்போது, பின் நம்பரை அழுத்திய பிறகும் பணம் வராமல் போகும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருப்போம். சில நேரங்களில் பணம் எடுத்துவிட்டதாக மொபைல் போனில் மெசேஜ் மட்டும் வந்துவிடும். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏ.டி.எம் மெஷின் கேட்ட பணத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறது.

நாக்பூரில் உள்ள ஏ.டி.எம் சென்டருக்குச் சென்ற ஒருவர், வெறும் 500 ரூபாய் மட்டும் எடுப்பதற்கு தேர்வு செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு 500 ரூபாய் கிடைப்பதற்கு பதிலாக 5 புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. ஆனால், அவரின் வங்கிக் கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதனால் ஆச்சர்யமடைந்த அந்த நபர் மீண்டும் அதே போன்று 500 ரூபாய் எடுத்தார்.

ஏ.டி.எம் மெஷின்
ஏ.டி.எம் மெஷின்

அப்போதும் ஐந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கின்றன. இந்தச் செய்தி அந்தப் பகுதி மக்களிடம் காட்டுத்தீயாகப் பரவியது. உடனே மக்கள் அந்த ஏ.டி.எம் மையத்துக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏ.டி.எம் சென்டரில் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்த போலீஸார் என்னவென்று விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அதற்குள் ஏ.டி.எம் மெஷினை வைத்த வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது. அதிகாரிகள் விரைந்துவந்து ஏ.டி.எம் சென்டரை மூடினர். இதனால் மக்கள் சோகத்தில் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெஷின் அதிகப்படியான பணத்தை சப்ளை செய்திருக்கிறது. மெஷினில் 100 ரூபாய் வைக்கவேண்டிய ட்ரேயில் 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டிருக்கின்றன. எனவேதான் 500 ரூபாய்க்கு ஐந்து 500 ரூபாய் நோட்டுகளை மெஷின் சப்ளை செய்திருக்கிறது" என்று தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்படவில்லை. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து வங்கி நிர்வாகம் விசாரித்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism