Published:Updated:

`பிரதமரின் திட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்' - டிஜிட்டல் முறையில் யாசகம் பெறும் பீகார் நபர்

ராஜு பட்டேல்

லல்லு பிரசாத் யாதவின் ஆதரவாளரான ராஜு படேல், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் யாசகம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

`பிரதமரின் திட்டத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன்' - டிஜிட்டல் முறையில் யாசகம் பெறும் பீகார் நபர்

லல்லு பிரசாத் யாதவின் ஆதரவாளரான ராஜு படேல், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் யாசகம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ராஜு பட்டேல்

நாட்டில் டிஜிட்டல் முறை அமலுக்கு வந்த பிறகு காய்கறி விற்பவர், பூ விற்பவர் என அனைத்துத் தரப்பினரும் டிஜிட்டல் முறையில் பணம் வாங்கிக்கொண்டிருக்கின்றனர். எல்லோரும் க்யூஆர் கோடு அடங்கிய அட்டையைத் தங்கள் கடை முன் வைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது, யாசகம் பெறுவதற்கும் டிஜிட்டல் முறை வந்துவிட்டது. பீகாரின் பெட்டியா என்ற ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராஜு பட்டேல் (51) என்பவர் வித்தியாசமான முறையில் யாசகம் பெற்றுவருகிறார். யாசகம் பெறும்போது யாராவது சில்லறை இல்லை என்று சொன்னால் உடனே, ``ஐயா போன் பே மூலம் யாசகம் செய்யுங்கள்" என்று கூறி, கழுத்தில் தொங்கவிட்டிருக்கும் க்யூஆர் கோடு அட்டையைத் தூக்கிக் காட்டுகிறார்.

ராஜு பட்டேல்
ராஜு பட்டேல்

லல்லு பிரசாத் யாதவின் ஆதரவாளரான ராஜு படேல், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் யாசகம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``நான் பிரதமரின் மன் கி பாத் ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்கத் தவறுவதில்லை. நான் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்றுக்கொள்கிறேன். நான் சிறு வயதிலிருந்தே யாசகம் செய்துவருகிறேன். டிஜிட்டல் முறைக்குத் தக்கபடி நானும் மாறிக்கொண்டேன். யாசகம் பெற்று முடித்த பிறகு ரயில் நிலையத்திலேயே படுத்துக்கொள்கிறேன். எனக்கு வாழ வேறு வழி தெரியாததால் யாசகம் செய்கிறேன். பல நேரங்களில் யாசகம் பெறும்போது அதிகமானோர் சில்லறையாகப் பணம் இல்லை என்று சொல்வார்கள். பலர் பணத்தைக் கையில் எடுத்து வரவில்லை என்று சொல்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜுபட்டேல்
ராஜுபட்டேல்

எனவே வங்கிக் கணக்கு ஒன்றும், இ-வேலட் ஒன்றும் திறந்திருக்கிறேன். எப்போதும் க்யூஆர் கோடு அடங்கிய அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்வேன். ஆனாலும் அதிகமானோர் ரொக்கமாகவே அளிக்கிறார்கள். சிலர் மட்டுமே ஆன்லைன் மூலம் கொடுக்கின்றனர். வங்கிக் கணக்கு திறக்க ஆதார் கார்டு, பான் கார்டு தேவை என்று சொன்னார்கள். அதையும் வாங்கினேன்" என்றார்.