Published:Updated:

HIV: ``உன் ரத்தத்தை செலுத்திக் கொள்கிறேன்..!" - காதலை நிரூபிக்க விபரீத முடிவெடுத்த சிறுமி

HIV - சிறுமி

அஸ்ஸாமில் 15 வயது சிறுமி தன் காதலனின் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் ரத்தத்தை தன்னுடைய உடலில் ஊசி மூலம் செலுத்திக்கொண்டார்.

HIV: ``உன் ரத்தத்தை செலுத்திக் கொள்கிறேன்..!" - காதலை நிரூபிக்க விபரீத முடிவெடுத்த சிறுமி

அஸ்ஸாமில் 15 வயது சிறுமி தன் காதலனின் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் ரத்தத்தை தன்னுடைய உடலில் ஊசி மூலம் செலுத்திக்கொண்டார்.

Published:Updated:
HIV - சிறுமி

எத்தனையோ வழிகளில் காதல் நிரூபிக்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அஸ்ஸாமில் ஒரு மைனர் பெண் தன்னுடைய காதலை நிரூபித்த விதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அஸ்ஸாமில் உள்ள சுவல்குச்சி மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர், அதே மாநிலத்திலுள்ள சதோலா என்ற இடத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். இருவரும் ஃபேஸ்புக் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார்கள். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் மிகவும் சீரியஸாக காதலிக்க ஆரம்பித்தனர். அந்தப் பெண் தனது வீட்டைவிட்டு காதலனிடம் பலமுறை சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறை அவர் வீட்டைவிட்டு வெளியேறும்போதும் அவர் பெற்றோர் திரும்ப அழைத்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

HIV
HIV

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் காதலனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த வாலிபர் அந்த சிறுமியிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, காதலனைப்போல் தானும் வாழவேண்டும் என்று முடிவுசெய்தார். இதற்காக தன்னுடைய காதலனின் உடம்பிலிருந்து ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் எடுத்தார். பின்னர் அதனை அந்த சிறுமி தன்னுடைய உடம்பில் ஊசி மூலம் செலுத்திக்கொண்டார்.

ஊசி
ஊசி

இது குறித்து கேள்விப்பட்டதும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட வாலிபருக்கு எதிராக போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து அந்த வாலிபரை கைதுசெய்தனர். அதோடு சிறுமி மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சிறுமியின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.