Published:Updated:

அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு... முதியவரின் தற்கொலையைத் தடுத்த மும்பை போலீஸார்!

மும்பை சித்திரிப்பு படம்

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் மும்பை போலீஸாருக்கு போன் செய்து தனது தந்தையின் தற்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு... முதியவரின் தற்கொலையைத் தடுத்த மும்பை போலீஸார்!

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் மும்பை போலீஸாருக்கு போன் செய்து தனது தந்தையின் தற்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.

Published:Updated:
மும்பை சித்திரிப்பு படம்

மும்பையில் போலீஸார், தனியாக இருக்கும் முதியவர்களுக்கு பாதுகாவலர்களாக இருந்துவருகின்றனர். தனியாக இருக்கும் முதியவர்கள் பட்டியலைச் சேகரித்து வைத்துக்கொண்டு அடிக்கடி அவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்காணித்துக்கொள்கின்றனர். மும்பை மாட்டுங்கா பகுதியில் பாரத் ருபேரல் (74) என்பவர் தனது வீட்டில் தனியாக வசித்துவருகிறார். அவரின் மகள் அமெரிக்காவில் வசிக்கிறார். நேற்று திடீரென தனது மகளுக்கு போன் செய்து, தனக்குத் தனியாக இருக்க மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், நோய்ப் பிரச்னைகளிலிருந்து தன்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை என்றும் கூறி, தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.

போன்
போன்

அதோடு தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்று எழுதி வைத்திருப்பதாகவும், சொத்து தொடர்பாக உயில் எழுதி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அவர் போனை வைத்தவுடன் அமெரிக்காவில் இருக்கும் அவரின் மகள் உடனே மாட்டுங்கா போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து, தனது வீட்டு முகவரியைச் சொல்லி தன் தந்தை தற்கொலை செய்துகொள்ளப்போகிறார். அவரைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனே போலீஸார் சிறிதும் தாமதிக்காமல் ருபேரல் இல்லத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஏற்கெனவே ருபேரல் 30 தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். உடனே அவரை மீட்டு போலீஸார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். போலீஸார் தக்க நேரத்தில் சென்று தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றியதால் அவர்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் ருபேரலின் மகள் நன்றி தெரிவித்திருக்கிறார். படித்துவிட்டு, வேலைக்காக பிள்ளைகள் வெளிநாடுகள் அல்லது வெளியிடங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில் மும்பையில் இருக்கும் முதியவர்களில் 40 சதவிகிதம் பேர் தனியாக வசிப்பதாகவும், அவர்களை கவனிக்க யாரும் இல்லாமல் இருப்பதாகவும் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism