Published:Updated:

`அது அவர்களின் தவற்றால் அல்ல'! -கொதித்த பினராயி விஜயன்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

வங்கியில் லோன் எடுத்தவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில வங்கிகளின் கூட்டமைப்புக் கூட்டம் கூட்டி கேட்டுக்கொண்டேன். இதை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதாகச் சொன்னார்கள்.

கேரளத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலருக்கு தங்குவதற்கு ரூம், உணவு கிடைக்காமல் அவஸ்தைப்பட்டுள்ளனர். சிலரை பேருந்திலிருந்து பயணிகள் இறக்கிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ``கொரோனா ஏற்கெனவே உலகின் 146 நாடுகளில் பரவியிருந்த நிலையில், இப்போது 152 நாடுகளுக்குப் பரவியுள்ளது. தினமும் கொரோனா பாதிப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நோயின் தீவிரத்தை இது காட்டுகிறது. கேரளத்தில் 18,011 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 17,743 பேர் வீடுகளிலும், 268-பேர் மருத்துவமனையிலும் கண்காணிப்பில் உள்ளனர். 65 பேர் புதிதாக மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளனர். புதிதாக 5,372 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுவரை 4,353 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்து கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

பொதுமக்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுவாசம் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது. எனவே, இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில் டாக்டர்களே தனிமை கண்காணிப்பில் இருக்கும் நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கியில் லோன் எடுத்தவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில வங்கிகளின் கூட்டமைப்புக் கூட்டம் கூட்டி கேட்டுக்கொண்டேன். இதை ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதாகச் சொன்னார்கள்.

நம் மாநிலத்தில் சுற்றுலா, ஹோட்டல் தொழில் பாதித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சில மோசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. அதுபோன்ற நம் மக்களின் செயல்பாடு ஏற்புடையதல்ல. கொரோனா பாதித்தது அவர்களின் தவறினால் அல்ல. நம் மாநிலத்தில் சிலருக்கு கொரோனா பாதித்தது, அதுவும் அவர்களின் தவற்றால் அல்ல. வட கேரளத்துக்கு வந்த பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த இருவருக்கு தங்க இடம் வழங்காமல், உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரை பஸ்ஸில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். பிரெஞ்சு பெண் ஒருவர் தன் மூன்று வயது குழந்தையுடன் சாப்பிட உணவு இல்லாமல் அவஸ்தைக்குள்ளானார். மூன்று ரஷ்ய பெண்கள் வந்தபோது தங்குவதற்கு அறை கொடுக்கவில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதுபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நடத்துவது அவமானகரமான செயலாகும். அந்த வெளிநாட்டினருக்கு போலீஸார் முயற்சி எடுத்து அறையும் உணவும் ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டால் அது கேரளத்தைப் பாதிக்கும். நம் மாநிலத்தைக்குறித்து மோசமான அனுபவம் அவர்களுக்கு ஏற்படும். இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்படிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் மாநிலத்தில் தங்க இடம் இல்லாமல், உணவு இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் இருக்கக் கூடாது.

கொரோனாவை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். சமுதாயத்தில் உள்ள சந்தேகத்தை களைய சோதனை மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோய் தீவிரமாக இருப்பதால் யாரும் மறைத்து வைக்கக் கூடாது. பேப்பர் போடுபவர்கள், பால் போடுபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். செய்தியாளர்கள் கூட நெருக்கமாக சேர்ந்து அமரக் கூடாது. விமான நிலையத்தில் வி.வி.ஐ.பி-யாக இருந்தாலும் சோதனை செய்துதான் அனுப்பப்படுவார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு