Published:Updated:

15 கி.மீ சுற்றி 12 பேரை கடித்துக் குதறிய நாய்; தற்காப்புக்காக அடித்துக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்!

பிட்புல்

பஞ்சாப்பில் பிட்புல் நாய் ஒன்று 12 பேரை கடித்துக் குதறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

15 கி.மீ சுற்றி 12 பேரை கடித்துக் குதறிய நாய்; தற்காப்புக்காக அடித்துக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்!

பஞ்சாப்பில் பிட்புல் நாய் ஒன்று 12 பேரை கடித்துக் குதறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பிட்புல்

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் பிட்புல் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்து தப்பித்த நாய் அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அலைந்து திரிந்து 12 பேரைக் கடித்திருக்கிறது. காயமடைந்தவர்கள் தினாநகர் மற்றும் குர்தாஸ்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டாங்கோ ஷா கிராமத்திலிருந்து சுஹான் கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் சுற்றித் திரிந்த நாய், அந்த வழியாக வந்தவர்களையும், சில கால்நடைகளையும் கடித்திருக்கிறது.

பிட்புல் நாய்
பிட்புல் நாய்

இறுதியாக சுஹான் கிராமத்துக்குள் நுழைந்த நாய் அங்கே வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்த கேப்டன் சக்தி சிங் என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை கடித்திருக்கிறது. அதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சக்தி சிங் தற்காப்புக்காக அந்த நாயை அடித்துக் கொன்றார். பிட்புல் நாய்கள் சில சமயங்களில் தங்களை வளர்த்த எஜமானர்களையும் தாக்கக் கூடியது எனக் கூறப்படுகிறது. பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த வகையான நாயை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.