Published:Updated:

`தோட்டத் தொழிலாளர்களின் நிலப் பிரச்னைக்குத் தீர்வு!' - மூணாறில் கேரள அமைச்சர் பேச்சு

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்

மூணாறில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச நிலம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் கேரள வருவாய்த்துறை அமைச்சர்.

தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குடியிருக்க இடம் வழங்கப்படும் எனவும் இதனால் அவர்களின் நிலப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் மூணாறில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச நிலம் வழங்கும் விழாவில் பேசியுள்ளார் கேரள வருவாய்த்துறை அமைச்சர்.

நிலம் சான்றிதழை வழங்கும் அமைச்சர்
நிலம் சான்றிதழை வழங்கும் அமைச்சர்

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது இடுக்கி மாவட்டம். ஆங்கிலேயர்கள் காலத்தில் இடுக்கி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தேயிலைப் பயிர் செய்யப்பட்டது. தோட்ட வேலைக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். சுதந்திரத்துக்குப் பின்னர், அந்தத் தேயிலைத் தோட்டங்கள் அரசு கையகப்படுத்தி, தற்போது தனியார் வசம் உள்ளது.

Vikatan

அங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலையான ஊதியம் வழங்கி, இருக்க வீடு கட்டிக் கொடுத்தது. தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்துவரும் தங்களுக்குச் சொந்தமாக இடம் வேண்டும் எனத் தங்கள் உரிமைகளைக் கூறி, குரல் கொடுக்க ஆரம்பித்தனர் தொழிலாளர்கள். தொடர் போராட்டத்தின் விளைவாக, நிலம் இல்லா தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு இடம் கொடுக்க இசைந்தது ஆளும் இடதுசாரி அரசாங்கம்.

நிலம் சான்றிதழை வழங்கும் அமைச்சர்.
நிலம் சான்றிதழை வழங்கும் அமைச்சர்.

அதன்படி, மூணாறு அருகே உள்ள குட்டியார்வாலி எனும் இடத்தில் உள்ள அரசு நிலத்தை அவர்களுக்குக் கொடுக்க முடிவுசெய்யப்பட்டது.

முதல்கட்டமாக 2,500 தொழிலாளர்களுக்கு குட்டிவாலியார் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், முதல்கட்டமாக 500 தொழிலாளர்களுக்கு நிலத்துக்கான சான்றிதழ்களை குட்டிவாலியார் பகுதியில் நடந்த விழாவில் வழங்கினார் கேரள வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன்.

1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்!
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்

விழாவில் பேசிய அமைச்சர், ``மீதமுள்ள நபர்களுக்கு வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் நிலத்தை அளந்து சான்றிதழ்கள் கொடுக்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்” என்றார். விழாவுக்கு கேரளா மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி தலைமை வகித்தார். தேவிக்குளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன், தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிலம் வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் போராடிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இந்நிகழ்வால் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு