Published:Updated:

டெல்லியைத் தொடர்ந்து குஜராத் மருத்துவமனை.. நம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை! #Corona

பிளாஸ்மா தானம்
பிளாஸ்மா தானம்

குஜராத்தில் பிளாஸ்மா சிகிச்சையைப் பெற்ற இரண்டு கொரோனா நோயாளிகளின் உடல் நிலை முன்பைவிட முன்னேற்றம் அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. இன்னும் இந்தக் கொடிய நோயைக் குணப்படுத்த எந்த சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவால் பாதித்தவர்களை குணப்படுத்த தேவையான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல சிகிச்சைகள் குறித்து அறிவியலாளர்களும், மருத்துவர்களும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸைக் குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிளாஸ்மா சிகிச்சையைப் பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதில் பிளாஸ்மா சிகிச்சை எவ்வளவு பாதுகாப்பானது மற்றும் திறமையானது என்பதை ஆய்வு செய்ய கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் ஏற்கெனவே கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன

இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு அகமதாபாத்தில் உள்ள எஸ்விபி(SVP) மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது என்று‌ மருத்துவமனையின் முதன்மை சுகாதார செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிக்சை!

கொரோனா நோயாளிகளுக்கு கான்வெலசென்ட் பிளாஸ்மா சிகிச்சை என்பது ஒரு பரிசோதனை முறையாகும். இந்த சிகிச்சையில், நோயிலிருந்து மீண்ட ஒரு நோயாளியின் பிளாஸ்மா, ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு மாற்றப்படுகிறது. இந்த சிகிச்சையானது மீட்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளியின் ரத்தத்திலிருந்து உருவாகும் ஆன்டிபாடிகள் மற்றொரு நோயாளிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மீட்கப்பட்ட கொரோனா நோயாளியின் ரத்தம் கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. முதல் நோயாளியின் ரத்தம் இரண்டாவது நோயாளிக்கு செலுத்தப்பட்டவுடன், அந்த ஆன்டிபாடிகள் இரண்டாவது நபருக்கு உள்ள கொரோனா வைரஸுக்கு எதிராக போராடத் தொடங்கும்.

பிளாஸ்மா
பிளாஸ்மா

எஸ்‌.வி.பி மருத்துவமனையில் கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்ட இரண்டு நோயாளிகளிடமிருந்து 200ML பிளாஸ்மா பெறப்பட்டுள்ளது. பிளாஸ்மா வழங்கிய 24 வயதானவர், ஏப்ரல் 6 ஆம் தேதியும், இரண்டாவதாக பிளாஸ்மா வழங்கிய 34 வயதான பெண், மார்ச் 29 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். முன்னதாக, சாகேத் மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 49 வயதான டெல்லி நபரின் உடல்நிலை மேம்பட்டுள்ளது. அவர் இப்போது குணமடைந்துள்ளார்.

ஐ.சி.எம்.ஆர் இந்தியா முழுவதும் பிளாஸ்மா பரிசோதனை குறித்து புதிய அழைப்பை வெளியிட்டுள்ளது திருவனந்தபுரம் (எஸ்.சி.டி.எம்.எஸ்.டி) இயக்குநர் டாக்டர் ஆஷா கிஷோர் கூறுகையில், ``இந்த முன்மொழிவு கொரானாவின் மிதமான சூழலில் பிளாஸ்மா சிகிச்சையின் விளைவைப் படிப்பதாகும். மாநிலத்தில் இப்போது கடுமையான வழக்குகள் இல்லாததால், மிதமான வழக்குகளுக்கான இந்தப் புதிய நெறிமுறை கேரளாவில் மிகவும் சாத்தியமானது" என்று கூறினார். சோதனைக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் ரத்த வங்கிகளைக் கொண்ட கொரோனா மருத்துவமனைகள் ஐ.சி.எம்.ஆர்-க்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆஷா கிஷோர் கூறினார்.

பிளாஸ்மா தானம்
பிளாஸ்மா தானம்

``ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் அளித்தால், மருத்துவமனைகள் மருத்துவ சோதனைக்குப் பதிவு செய்யலாம். கொரோனா வழக்குகளுக்கு சிகிச்சையளிக்கும் மாநில அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகள் விண்ணப்பித்துள்ளன. மாநில அரசின் ஒப்புதல் கிடைத்ததும், முதலில் தனது முன்மொழிவை மாநில அரசிடம் சமர்ப்பித்த எஸ்.சி.டி.எம்.எஸ்.டி-யின் (SCTIMST) மாற்று மருந்துத் துறை, அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அரசு மருத்துவமனைகளுடன் ஒத்துழைக்க முடியும்" என்று அவர் கூறினார்.

பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் கொரோனாவிலிருந்து மீண்ட முதல் நபர்! - டெல்லி மருத்துவர்கள் சாதனை

SCTIMST என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம். பிளாஸ்மா சிகிச்சைக்கான மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவதற்கு ஐ.சி.எம்.ஆர் இடமிருந்து அனுமதி பெற்றது. மீட்கப்பட்ட கொரோனா நோயாளியின் ரத்தத்திலிருந்து ஆன்டிபாடிகளை பிளாஸ்மா சிகிச்சை மற்றொரு நோயாளிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகிறது. நாட்டில் இப்போதுவரை, இது மோசமான நோயுற்ற நோயாளிகளுக்கான சிகிச்சையளிக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது இது மிதமான கொரோனா வழக்குகளிலும் சோதிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு