Published:Updated:

பீகார் வருகையின்போது பிரதமர் மோடியைக் கொல்ல சதி... உளவுத்துறை தகவலால் இரு தீவிரவாதிகள் கைது!

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடியைக் கொலைசெய்யத் திட்டமிட்ட இரண்டு தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

பீகார் வருகையின்போது பிரதமர் மோடியைக் கொல்ல சதி... உளவுத்துறை தகவலால் இரு தீவிரவாதிகள் கைது!

பிரதமர் நரேந்திர மோடியைக் கொலைசெய்யத் திட்டமிட்ட இரண்டு தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

Published:Updated:
நரேந்திர மோடி

பீகார் மாநிலம், பாட்னாவில் ஒரு தீவிரவாத அமைப்பு செயல்பட்டுவருவதாக உளவுத்துறை பீகார் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது. இதையடுத்து போலீஸார் பாட்னாவின் புல்வாரி ஷெரீப் என்ற இடத்தில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் இரண்டு தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். அதோடு அங்கிருந்து துண்டுப்பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் `2047-ல் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி இந்தியா’ என்ற தலைப்பில் கட்டுரை இருந்தது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது அவர்களின் பெயர் அதர் பர்வேஸ், மொகமத் ஜலாலுதீன் என்று தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரும் பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு வரும்போது அவரைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பிரதமர் இந்த மாதம் 12-ம் தேதி பீகார் வந்திருந்தார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அப்போதுதான் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீஸார் 11-ம் தேதியே ரெய்டு நடத்தி இரண்டு பேரையும் கைதுசெய்துவிட்டனர். அவர்கள் இதற்காக இந்த மாதம் 6, 7-ம் தேதி ஆலோசனைக் கூட்டமும் நடத்தியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒரு வாரம் இதற்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசத்திலிருந்து அதிகமான இளைஞர்கள் இவர்களிடம் வந்து தீவிரவாத பயிற்சி எடுத்துச் சென்றதும் தெரியவந்திருக்கிறது.

இந்தப் பயிற்சிக்குத் தேவையான பணத்தை பாகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி போன்ற நாடுகளில் தங்கியிருக்கும் சமூக விரோதிகளிடமிருந்து வசூலித்து இந்தத் தீவிரவாத முகாமை நடத்திவந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பிரதமர் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்பு தீவிரவாதிகள் இரண்டு பேரும் பிடிபட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்களுடன் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!