Published:Updated:

`பேசியது போதும்; செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது!' - ஐ.நாவில் பிரதமர் மோடி #ClimateChange

PM Modi
PM Modi

பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது என பிரதமர் மோடி பேசினார்.

ஒருவார காலம் அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதற்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகர் சென்றடைந்த அவர், அங்கு எரிசக்தித் துறை நிறுவன அதிகாரிகள், இந்திய வம்சாவளியினரைச் சந்தித்துப் பேசினார். பின்னர், என்.ஆர்.ஜி மைதானத்தில் டெக்சாஸ் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த `ஹௌடி மோடி' என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் கலந்துகொண்டார்.

`ஹிஸ்டரி - கெமிஸ்ட்ரி; எனர்ஜி - சினெர்ஜி!’ - பன்ச் வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்த மோடி #HowdyModi
Modi
Modi

இதையடுத்து, அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் அவையின் 74 வது கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார். மேலும், உலக நாடுகள் இந்த விவகாரத்தில் அக்கறை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது என்றும் அவர், தனது உரையில் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்ற விவகாரம் குறித்து அவர் பேசுகையில், ``நாம் பேசிக்கொண்டிருப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. செயலில் இறங்குவதே இன்றைய சூழலில் இந்த உலகத்துக்குத் தேவை. பல மடங்கு உபதேசங்களை விட, ஒரு சிறிய செயல் என்பது மேலானது'' என்றார். அதேபோல் இந்தவிவகாரத்தில் இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், ``இந்தியாவில் 15 கோடி பேருக்கு எரிவாயு இணைப்புக் கொடுத்திருக்கிறோம். மழைநீர் சேமிப்பு, நீர்வள மேம்பாட்டுக்காக `ஜல் ஜீவன் திட்டம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

`மில்லியன் மாணவர்களின் குரல்!’ - அதிரவைக்கும் சிறுமி கிரேட்டா தன்பெர்க் #fridaysforfuture
Modi
Modi

இந்தியாவின் சுதந்திரத் தினத்தின்போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்க, அது மக்கள் இயக்கமாக உருவாக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்'' என்றார். பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராக இந்தியா, `தேவை மற்றும் பேராசை கூடாது' என்ற தத்துவங்கள் அடிப்படையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் பிரதமர் மோடி, தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு