Published:Updated:

பாதுகாப்பில் குறைபாடு; 20 நிமிட காத்திருப்பு - ரத்தானது பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம்!

மோடி
News
மோடி

அப்போது, பிரதமரின் காரை மேம்பாலம் ஒன்றில் வைத்து சிலர் வழிமறித்ததாகவும், அதனால் பிரதமரின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்துக்காக இன்று (5-ம் தேதி) பிரதமர் மோடி பஞ்சாப் செல்வதாக இருந்தது. பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருந்தார். இந்த நிலையில், மோடி தனது பஞ்சாப் பயணத்தை திடீரென ரத்துசெய்திருக்கிறார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்த நிலையில், சாலை மார்க்கமாக பஞ்சாப் செல்லவிருந்தார். அப்போது, பிரதமரின் காரை மேம்பாலம் ஒன்றில் வைத்து சிலர் வழிமறித்ததாகவும், அதனால் பிரதமரின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக, பிரதமரின் பஞ்சாப் பயணம் திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

பிரதமரின் சாலைவழிப் பயணம் குறித்து முன்னதாகவே தாங்கள் பஞ்சாப் மாநில அரசிடம் முறையாகத் தெரிவித்திருந்தபோதிலும், பஞ்சாப் அரசு பிரதமரின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லையென்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. பிரதமரின் கார் மறிக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பஞ்சாப் அரசிடம் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz