Published:Updated:

`பிரதமர் மோடி பாதுகாப்புக்கு மட்டும் ரூ.600 கோடி!' - பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்

மோடி
மோடி

நேற்று தாக்கலான பட்ஜெட்டில் இந்தியப் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிக நீண்ட உரையுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், நேற்று தாக்கலான பட்ஜெட்டில் இந்தியப் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக (எஸ்.பி.ஜி) மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். கடந்த ஆண்டு பிரதமரின் பாதுகாப்புக்கு 540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது அதில் இந்த ஆண்டு 60 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே 2018-ம் ஆண்டு 420 கோடி ரூபாயாக இருந்தது.

`மத்திய பட்ஜெட் 2020-21' - சிறப்பம்சங்கள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு எஸ்.பி.ஜி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் அந்த பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. தற்போது அவர்களுக்கு சி.ஆர்.பி.எஃப்-பின் Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மோடி
மோடி

தற்போது இந்தியாவில் (எஸ்.பி.ஜி) சிறப்பு பாதுகாப்புக் குழு கொண்ட ஒரே மனிதர் பிரதமர் மோடிதான். அவரின் பாதுகாப்புக்கு மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தன் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பிறகே பிரதமருக்கு எனத் தனிச் சிறப்பு பாதுகாப்புப் படை தேவை என உணரப்பட்டு அப்போது முதல் இந்தியாவின் பிரதமருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு