Published:Updated:

"படங்களுக்கு எதிரான தேவையற்ற விமர்சனங்களைத் தவிருங்கள்!"- பா.ஜ.க நிர்வாகிகளுக்குப் பிரதமர் அறிவுரை

பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

"படங்களுக்கு எதிரான தேவையற்ற விமர்சனங்களைத் தவிருங்கள்!"- பா.ஜ.க நிர்வாகிகளுக்குப் பிரதமர் அறிவுரை

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Published:Updated:
பிரதமர் மோடி

டெல்லியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக (ஜனவரி 16, 17-ம் தேதிகளில்) நடைபெற்றது. ஜே.பி நட்டா, அமித் ஷா, பா.ஜ.க ஆளும் பிற மாநிலத்தின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். 

அப்போது பேசிய நரேந்திர மோடி, "மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாள்கள்தான் இருக்கின்றன. ஆதலால், சமூகத்தின் அனைத்துத்தரப்பு மக்களையும் சந்தித்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவின் சிறந்த சகாப்தம் வந்து கொண்டிருக்கிறது, நாட்டின் வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான 'பதான்' திரைப்பட சர்ச்சையை  மேற்கோள்காட்டி திரைப்படங்களுக்கு எதிரான தேவையற்றக் கருத்துகள் கூறுவதைத் தவிர்க்குமாறு பா.ஜ.க- வினுடைய முக்கியத் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Pathaan | பதான்
Pathaan | பதான்

வரும் ஜனவரி 25-ம் தேதி 'பதான்' திரைப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் ‘பேஷாராம் ரங்’ என்னும் பாடல் வெளியானது. அப்பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி நிற பிகினி உடை பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, பா.ஜ.க பிரமுகர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைக் கருத்துக்களைப் பேசி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.